குடும்பத்தை தவிர்த்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு பண்டிகை என்றாலே ஆறுதல் தருவது நம் நாட்டு மக்களை சிங்கப்பூரில் பார்த்து வாழ்த்து சொல்வது தான். நம்மைப் போன்று பல மக்கள் குடும்பத்தை பிரிந்து சிங்கப்பூரில் சம்பாதிப்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று ஆறுதலும் உள்ளூர ஏற்படுவதால் என்னவோ மனதிற்கு சின்ன நிம்மதி ஏற்படும்.
நிம்மதியுடன் சேர்த்து, கொண்டாட்டத்திற்கும் பஞ்சமில்லாமல் தமிழர்கள் அதிகமாக கூடும் லிட்டில் இந்தியா பகுதியில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்காக நிகழ்ச்சி நிரல் இங்கே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.
- 13 ஆம் தேதி, சனிக்கிழமை காலை 10 மணி அளவில் லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள பொலி பகுதியில் குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 13 மற்றும் 15ஆம் தேதி இரவு ஏழு மணி அளவில் பொங்கல் சம்பந்தமான கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு பொலி பகுதியில் சிறப்பு கலாச்சார நிகழ்ச்சிகள் மண்வாசனை எனும் தலைப்பில் நாட்டுப்புற கலைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- 15 ஆம் தேதி மாலை 3.30 மணி முதல் வயதானவர்களுக்கு பொங்கல் விநியோகம் செய்யப்படும்.
- 15, 16, மற்றும் 17-ஆம் தேதிகளில் மாலை 5:30 மணிக்கு செராங்குன் ரோட்டில் பொதுமக்களுக்கு பொங்கல் வினியோகம் செய்யப்படும்.
- 15, 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மாலை 6.45 முதல் பெரிய பேருந்து பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மக்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். இந்த பேருந்து செரங்கூன் ரோட்டில் இருந்து புறப்படும்.
- 16 ஆம் தேதி மாலை மூன்று மணிக்கு பொலி பகுதியில் மாட்டுப்பொங்கல் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்.
- 20ம் தேதி காலை 10 மணிக்கு நிகழ்ச்சியில் நிறைவாக நிறை பொங்கல் வைத்து வழிபாடு நிறைவடையும்.
பொங்கல் கொண்டாட்டத்தை தனியாக கழிக்காமல் சிங்கப்பூரில் வாழும் இந்திய நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து கொண்டாடி மகிழுங்கள்.