சாங்கி விமான நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து அதன் சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றும் வியக்க வைத்தன. செயற்கை நீர்வீழ்ச்சியில் இருந்து ஓய்வெடுக்கும் அறை வரை ஒவ்வொன்றையும் பார்த்து இதுவரை உலகெங்கிலும் இல்லாத வகையில் விமான நிலையத்தை தயார் செய்திருக்கின்றது சிங்கப்பூர் அரசு.
இந்நிலையில் இந்த பிரம்மாண்டத்திற்கு எல்லாம் முத்தாய்ப்பாக தற்பொழுது 220 அறைகளுடன் கூடிய புதிய பிரம்மாண்ட ஹோட்டலை கட்ட சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கான கட்டமைப்பு பணியானது 2027 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இரண்டாவது டெர்மினல் தெற்கு பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு மேலே இந்த ஹோட்டல் ஆனது திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டலுக்கு அனைத்து பொதுமக்களும் செல்லலாம் என்பதை சிறப்பம்சம் ஆகும்.ஏற்கனவே 3வது டெர்மினலில் 563 அறைகளுடன் இருக்கும் ஹோட்டல் 2008 ஆம் ஆண்டு முதல் இயங்வகி ருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்பொழுது கட்டப்படும் ஹோட்டல் பொதுமக்கள் மற்றும் உயர்தர வகுப்பினர் ஆகிய இருவரும் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு மற்ற ஹோட்டலில் இருந்து வேறுபட்ட அளவில் வடிவமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் இல்லாத அளவிற்கு நட்சத்திர ஹோட்டல் தரத்துடன் அமைக்கப்பட வேண்டும் என்பது இதன் இலக்காகும்கொ.ரோனா நோய் தொற்றுக்குப் பிறகு பயணிகளின் வருகையானது முன்பு போல அதிகரித்துள்ளதால் ஆண்டிற்கு 90 மில்லியன் பயணிகள் வருவார்கள் என அரசு முன்கூட்டியே கணித்துள்ளதால் இந்த பிரம்மமாண்ட ஹோட்டல்அனைத்து பயணிகளையும் கவரும் வகையில் கட்டதிட்டமிடப்பட்டுள்ளது