TamilSaaga

10 ஆண்டுகளாக மாறாத சிங்கப்பூர் “Single பசங்க” சதவீதம் – சுவாரஸ்யமான புள்ளி விவரங்கள்

ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களில் பல சுவாரஸ்யமான தகவல்கள் காண முடியும்.

2020ஆம் ஆண்டில் சுமார் 1,50,000 வீடுகளில் மறு ஆய்வு செய்தபோது கண்டறியப்பட்ட தகவலில் உயர்கல்வி பெற்ற ஆண்களும் பெண்களுக்கும் இடையே குறிப்பிட்ட விடயத்தில் ஒற்றுமை நிலவுவதை காண முடிகிறது.

2020 ஆண்டு புள்ளி விவரப்படி உயர்கல்வி முடிக்காத 40 முதல் 49 வயதுவரை உள்ள ஆண்கள் தனிமையில் உள்ளனர். அதே வயதுடைய பல்கலைகழக படிப்பினை பெற்ற 12.3 சதவீதம் ஆண்களும் தனிமையில் உள்ளனர்.

இதே போல் 2020 கணக்கெடுப்பில் 40 முதல் 49 வயதுவரை உள்ள பெண்களில் 8.7 சதவீதம் பேர் தனிமையில் உள்ளார்கள். அதே வயதுடைய பல்கலைக்கழகத்தில் பயின்ற 18.7 சதவீத பெண்கள் தனிமையில் இருப்பதாக விவரங்கள் கூறுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் இந்த சதவீதம் பெரிதளவில் மாற்றமில்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பக்கல்வியை மட்டுமே பெற்ற ஆண்கள் ஏன் இணையர் இல்லாமல் தனித்தே இருக்கின்றனர் என்பதற்கு காரணம் அவர்கள் படிப்பிற்கு ஏற்ற குறைந்த ஊதியம் உள்ள வேலைகளே செய்கின்றனர். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது.

வீட்டு வசதி, கார், கணினி, குழந்தைகள் கல்வி மற்றும் வளர்ப்பது போன்ற காரணிகள் முக்கியமானவை. இந்த காரணிகளால் பல இரட்டை தொழில்களில் ஈடுபடும் தம்பதி குழுக்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.
2010ல் 47.1 சதவீதமாக இருந்த இந்த குழுக்கள் 2020ல் 52.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Related posts