TamilSaaga

சிங்கப்பூரில் குறுகிய-கால பாஸ் வைத்திருப்பவர்கள் : தடுப்பூசி அளிப்பது குறித்து ஆய்வு – அமைச்சர் ஜனில்

சிங்கப்பூரில் குறுகிய கால பாஸ் பெற்றவர்கள் பெருந்தொற்று தடுப்பூசிகளை எவ்வாறு பெறலாம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) ஆய்வு செய்து வருகிறது என்று மூத்த சுகாதார அமைச்சர் ஜனில் புதுச்சேரி இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) தெரிவித்தார். தொற்றுநோய் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நீண்ட காலத்திற்கு சிங்கப்பூரில் இருந்தவர்களும், மேலும் பாதிக்கப்படக்கூடியவர்களும் இதில் அடங்குவர்.

“சிங்கப்பூரின் தேசிய தடுப்பூசி திட்டம் என்பது சிங்கப்பூரை தங்கள் இல்லமாக மாற்றும் அல்லது நீண்ட காலத்திற்கு இங்கு வசிக்கும் அனைவரையும் உள்ளடக்கும்” என்று டாக்டர் ஜனில் நாடாளுமன்றத்தில் கூறினார். இன்று பாராளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி எம்பி ஹி டிங் ரு, நீண்ட கால குடியிருப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் வாழும் குறுகிய கால பாஸ் வைத்திருப்பவர்களை தடுப்பூசி திட்டங்களுக்கு தகுதி பெற MOH அனுமதிக்குமா என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்தனை கூறினார்.

இன்று நடந்த நாடாளுமன்ற அமர்வில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சிங்கப்பூரில் குறுகிய கால பாஸ் பெற்றவர்கள் பெருந்தொற்று தடுப்பூசிகளை எவ்வாறு பெறலாம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) ஆய்வு செய்து வருகிறது என்று மூத்த சுகாதார அமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார்.

மேலும் இதுகுறித்த முழு தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts