TamilSaaga

சிங்கப்பூரில் வேலை செய்ய போறீங்களா? PCM permit பெஸ்ட்டா? Skill வொர்க் பெர்மிட்டில் போறது பெஸ்ட்டா?

சிங்கப்பூர் வேலைக்காக வர நிறைய வொர்க் பாஸ்கள் நடைமுறையில் இருக்கிறது. இதில் சில பாஸ்களுக்கு அதிக அளவு படிப்பு இருக்கும் அதனால் சம்பளம் கூட லட்சத்தில் இருக்கும். இந்த பாஸ்களுக்கு சாதாரண நபர்களால் விண்ணப்பித்து விட முடியாது. படித்தவர்களும், படிக்காதவர்களும் சம அளவில் விண்ணப்பிக்க கூட வொர்க் பாஸ்களில் PCM மற்றும் Skill அதிகம் இடம் பிடித்து இருக்கிறது. இதில் எது பெஸ்ட் என தெரிந்து கொள்வதற்கு முன்னர் இதை பற்றி அடிப்படை தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.

PCM, Shipyard permit:

படிக்காமல் வேலைக்கு சிங்கப்பூர் வர நினைப்பவர்கள் இங்குள்ள தொழிற்சாலை, கப்பல் கட்டும் இடங்களுக்கு வரலாம். இப்படி வருபவர்களுக்கு தான் PCM பெர்மிட் கொடுக்கப்படும். இதில் வர எந்த வித அடிப்படை கல்வி தகுதியும் கேட்கப்படாது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் செல்ல Skill டெஸ்ட் அடிக்க போறீங்களா? தமிழ்நாட்டில் BCA அப்ரூவ் செய்த இன்ஸ்ட்டியூட் வெறும் இரண்டு தானா? இத தெரிஞ்சிக்காம அட்மிஷன் போடாதீங்க

Skill வொர்க் பெர்மிட்:

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட skill இன்ஸ்ட்டியூட்களில் அட்மிஷன் போட்டு 45 முதல் 60 நாட்கள் பயிற்சி எடுத்து தேர்வு எழுதி பாஸ் ஆக வேண்டும். அந்த சான்றிதழை கொண்டு இங்குள்ள கம்பெனிகளில் வேலை போட்டு வர முடியும். இவர்களால் அதிக வருடம் சிங்கப்பூரில் இருக்க முடியும்.

இந்த ரெண்டு பெர்மிட்டிலும் சம்பளம் ஏறக்குறைய ஒரே அளவில் தான் இருக்கும். PCM, Shipyard பெர்மிட்டில் ஏஜென்ட் கட்டணமாக 2 முதல் 3 லட்சத்திற்குள் தான் கேட்கப்படும். டெஸ்ட் அடித்து வரும் போது விமான டிக்கெட்டுடன் 4 முதல் 4.5 லட்சத்திற்குள் இருக்கும்.

இந்த இரண்டு வகையான பாஸிலுமே சம்பளம் ஒரே மாதிரியாக இருந்தாலும் PCM, shipyard பெர்மிட்டில் வரும் போது வாடகை, தண்ணி, மின்சார என பிடித்தம் நிறைய இருக்கும். இதை முதலிலேயே உங்கள் ஏஜென்ட்டிடம் கேட்டு தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு செல்ல Agent தேடுறீங்களா? கவலைய விடுங்க… பிடிங்க லிஸ்ட்… யார் பெஸ்ட்? யார் வொர்ஸ்ட்?

Skill டெஸ்ட் முடித்து வரும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும். சொந்த நாட்டுக்கு சென்று திரும்பி வரும் போது 1 லட்சத்திற்குள் தான் செலவுகள் இருக்கும். ஆனால் pcm, shipyardல் திரும்பி வருபவர்கள் முதல் முறை வந்த தொகையிலும் அல்லது அதை விட அதிக அளவில் தான் இருக்கும்.

இந்த ரெண்டு பாஸினை ஒப்பிட்டு பார்த்தால் ரெண்டுமே ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருக்கும். சம்பளத்தினை தவிர. பொருளாதார பிரச்னையை சரிசெய்ய சிங்கப்பூர் pcmல் வருகிறீர்கள் என்றால் இங்கு 2 வருடம் தொடர்ந்து வேலை செய்யுங்கள். அதில் ஒரு லட்சம் வரை சேர்த்து அதன் பின்னர் சிங்கப்பூரில் டெஸ்ட் முடித்து பெர்மிட் மாறுவதே சிறந்ததாக இருக்கும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts