TamilSaaga

வெளிநாட்டினர் வேலைவாய்ப்புக் கொள்கை – அமைச்சர் சண்முகத்தின் சவாலை ஏற்ற பி.எஸ்.பி

‘சீக்கா’ என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிற்கும் இடையேயான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு குறித்தும், வெளிநாட்டினர் வேலைவாய்ப்புக் கொள்கை குறித்தும் விவா­திப்­ப­தற்­கான சவாலை சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி (பிஎஸ்பி) ஏற்­ப­தாக தொகு­தி­யில்லா நாடாளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் மன் வாய் தற்போது தெரி­வித்­துள்­ளார்.

மேலும் இந்த விவா­தத்­திற்கு தயாராகும் வகையில் இந்த நிகழ்வு தொடர்பான கூடுதலான தகவல்களை ஜூலை மாதத்தில் நாடாளுமன்றம் கூடும்நேரத்தில் அரசிடம் இருந்து எதிர்க்கட்சி பெற்றுக்கொள்ளும் என்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பகுதியில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பெறப்பட்ட தகவல்களில் இருந்து பொருத்தமான தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்வது குறித்து பிஎஸ்பி முடிவு செய்யும் என்றும் அதற்கு பிறகு விவா­தத்­திற்­கான தேதியை முடிவு செய்­ய ­வேண்­டி­யது மன்றத்தின் நாயகரின் பொறுப்பு என்று அவர் கூறினார்.

மேலும் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கி 2020ம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ள ‘எம்ப்­ளாய்­மெண்ட் பாஸ்’, ‘எஸ் பாஸ்’, வேலை அனு­மதி அட்டை போன்­ற­வற்­றின் எண்­ணிக்கை குறித்த கேள்­வி­க­ளைத் தங்களுடைய கட்சி கேள்விகளை எழுப்பும் என்றார் லியோங் மன் வாய்.

முன்னதாக திரு. லியோங்கை நோக்கி, அமைச்­சர் சண்­மு­கம் “சீக்கா குறித்து விவா­திப்­ப­தற்­கான தீர்­மா­னத்தை முன்­வைக்­கு­மாறு உங்களுக்கு அழைப்புவிடுக்கிறேன்.” “சீக்கா பற்றி வெளி­யான கருத்­து­களில் பெரும்பாலான விஷயங்கள் பொய் என்­பது உங்களுக்கும் தெரி­யும்,” என்­றும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts