TamilSaaga

“சிங்கப்பூரில் பன்றி இறைச்சி எலும்பை மசூதி பால்கனியில் வீசிய நபர்” – மூன்று மாத சிறைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில், ஒரு மசூதியின் ஊறுப்பினர்கள் குழுவாக இருந்தபோது அவர்களின் முன்னிலையில் 57 வயதுடைய நபர் ஒருவர் அந்த மசூதியின் பால்கனியில் ஓவர் பன்றி எலும்பை தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த லிம் பெங் வெய் இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 9) தான் ஒரு பொது தொந்தரவு குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

மேலும் அந்த நபர் மீது பொது தொந்தரவுக்கான இரண்டு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஒன்று எலும்பை மசூதியின் பால்கனியில் எரிந்தது. மற்றொன்று 168, டெலோக் அயர் தெருவில் உள்ள சிங்கப்பூர் மியூசிக்கல் பாக்ஸ் அருங்காட்சியகத்தின் கூரையை நோக்கி வெண்ணையை வீசியதாகும். இந்த இரண்டு விஷயங்களுக்கு தீர்ப்பின்போது கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 14 காலை தஞ்சோங் பாகரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து லிம் இரண்டு பன்றி எலும்புகளை வாங்கியதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. இதனையடுத்து அவர் மசூதி மீது எலும்பை வீச எண்ணி 192 டெலோக் அயர் தெருவில் அமைந்துள்ள மஸ்ஜித் அல்-அப்ரார் மசூதியை நோக்கிச் சென்றுள்ளார். மேலும் அவர் கட்டிடத்தை அடைந்ததும், அதன் பேக்கேஜிங்கிலிருந்து ஒரு எலும்பை எடுத்து மசூதியின் இரண்டாம் நிலை பால்கனியை நோக்கி வீசியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட நபர் முதன்முதலில் 1998ல் மனநிலை பிரச்சனை உள்ளது கண்டறியப்பட்டது. லிம் தனது மருந்துகளை எடுத்துக்கொள்வதில் ஓரளவு மட்டுமே இணங்குவதாக ஒப்புக்கொண்டார். அவர் பொது தொந்தரவு செய்த குற்றத்திற்காக, அவருக்கு மூன்று மாதங்கள் சிறை அல்லது 2,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related posts