TamilSaaga

சிங்கப்பூர் SG Arrival Card என்றால் என்ன?.. எப்படி அப்ளை செய்வது? – மேலும் பல தகவல்கள்

சிங்கப்பூர் வரும் பயணிகள் எலக்ட்ரானிக் லேண்டிங் கார்டாக பயன்படுத்தும் ஒரு கார்டு தான் SG Arrival Card என்று அழைக்கப்படுகிறது. மேலும் உலக அளவில் பெருந்தொற்று பரவல் அதிகமாக உள்ள நேரத்தில் மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க, முறையான சுகாதார சான்றிதழ் ஒன்று சிங்கப்பூர் அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சுகாதார சான்றிதழ் சேவை தற்போது SG Arrival Cardவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மின்னணு சுகாதார சான்றிதழுடன் கூடிய எஸ்.ஜி. வருகை அட்டையானது, சிங்கப்பூருக்குள் நுழைய விரும்பும் அனைத்து பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள், பயண விவரங்கள் மற்றும் சுகாதார அறிவிப்பை சமர்ப்பிக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்த SG Arrival கார்டு என்பது விசா அல்ல என்பதை பயணிகள் நினைவில்கொள்ளவேண்டும்.

SG Arrival Cardஐ அரசிடம் சமர்ப்பிக்கும் முன் தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன ?

சிங்கப்பூர் வருவதற்கு மூன்று நாட்களுக்குள் உங்கள் எஸ்ஜி வருகை அட்டையை சமர்ப்பிக்கவும். அவ்வாறு செய்வது குடியேற்ற அனுமதியின் போது தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்கும்.

உங்கள் SG வருகை அட்டையை https://eservices.ica.gov.sg/sgarivalcard/ வழியாக அல்லது அதிகாரப்பூர்வ “எஸ்ஜி வருகை அட்டை” மொபைல் செயலிகள் மூலம் சமர்ப்பிக்கவும்.

அதிகாரப்பூர்வ எஸ்.ஜி. வருகை அட்டை மின் சேவை வழியாக சமர்பிப்பதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. மேலும் எஸ்.ஜி. வருகை அட்டையை கட்டணம் செலுத்தி சமர்ப்பிக்க உதவி வழங்கும் வணிக நிறுவனங்களுக்கு ஐ.சி.ஏ ஆதரவு அல்லது அங்கீகாரம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து வெற்றிகரமாக நீங்கள் சமர்ப்பித்தவுடன், உங்களுக்கு ஒரு ஒப்புதல் சான்றிதழ் வழங்கப்படும். குடிவரவு கவுண்டரில் உள்ள ஐ.சி.ஏ அதிகாரியிடம் உங்கள் பயண ஆவணங்கள் மற்றும் எஸ்.ஜி. வருகை அட்டை ஒப்புதல் ஆகியவற்றை நீங்கள் வழங்க வேண்டும்.

Related posts