TamilSaaga

தடுப்பூசி போட்டுக்கொண்டவரா நீங்கள்? உங்களுக்காக அசத்தல் சலுகைகள்

சிங்கப்பூரில் தடுப்பூசி போடும் வேகத்தையும் எண்ணிக்கையும் அதிகப்படுத்தும் பொருட்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பல நிறுவனங்களும் சலுகைகள் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதுவரை 2 மில்லியன் மக்களுக்கு அதிகமானோர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டு உள்ளார்கள்.

1.”Cdgtaxi” எனும் வாடகை கார் நிறவனமானது தடுப்பூசி செலத்திக்கொண்ட மக்களுக்கு வாடகை பயணத்தில் 3 வெள்ளி தள்ளுபடி என்று அறிவித்துள்ளது.

2.”Gojeksg” நிறுவனமானது தடுப்பூசி செலுத்திக்கொள்ள செல்லும் மக்களுக்கு பயண தொகையானது 15 வெள்ளிக்கு குறைவாக இருந்தால் அந்த பயணத்தை இலவசமாக தருகிறது. இதுவரை சுமார் 2 லட்சம் பேர் இலவசமாக பயணம் செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.”Shake shack” உணவகம் அடுத்த மாதம் துவக்கத்திலிருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் Burger என்ற உணவை வாங்கும்போது அவர்களுக்கு French Fries எனும் உணவை சேர்த்து இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

4.”Jiak Chuan” சாலையில் உள்ள ஒரு கடையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களுக்கு காப்பி இலவசம் என அறிவிக்கப்பட்டது. முதல் தவணை மட்டும் செலுத்தியவர்களுக்கும் இந்த சலுகை உண்டு. இதனால் நேற்றுவரை மட்டுமே சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்த சலுகையில் பயணடைந்துள்ளனர்.

சிங்கப்பூர் முழுவதும் தடுப்பூசி அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டி இந்த முன்னெடுப்பை நிறுவனங்கள் எடுத்துள்ளன.

Related posts