TamilSaaga

சிங்கப்பூர் Woodlands-ல் மின்தூக்கி தீ விபத்து.. ஆயிரக்கணக்கான Personal Mobility சாதனங்கள் தூக்கி வீசப்பட்டது

சிங்கப்பூர் உட்லண்ட்சில் உள்ள மின் தூக்கி சமீபத்தில் ஒரு தீ விபத்தை சந்தித்தது. Woodlands drive 16-இல் உள்ள ப்ளாக் எண் 537ல் வசிக்கும் மக்கள் மின்தூக்கி தீ விபத்தில் சிக்கிய ஒருவர் தீ பற்றி எரிந்தபடி வெளியே வந்ததாகவும் அதனை அனைக்க முயன்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

பிறகு Khoo Teck Puat hospital மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என காவல்துறை தெரிவித்தது. மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி சேதமடைந்த PMD (Personal Mobility Device) எனும் நடமாட்ட பயன்பாட்டு சாதனங்கள் தூக்கி வீசப்பட்டது.

கடந்த ஜீன் மாதம் 4-ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சுமார் 1700க்கும் மேற்பட்ட சாதனங்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கே.ஜி.எஸ் எனும் கழிவு நிறுவனமானது தெரிவித்துள்ளது.

ஜீன்.30 ஆம் தேதிவரை இந்த PMD க்கள் பெறப்படும் எனவும் UL2272 வகையிலான சாதனங்களை பொதுமக்களே பாதுகாப்பாக கழிக்க வேண்டும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சான்றிதழ் பெறாத பதிவு நீக்கப்பட்ட சாதனங்களை பொது இடங்களில் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

Related posts