TamilSaaga

வெளிநாட்டு பயணத்துக்கு சிங்கப்பூர் மக்கள் ஆர்வம்… எந்த நாட்டிற்கு போகலாம் என தேடல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டு பயணங்கள் இன்னும் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழலில் சிங்கப்பூரில் வெளிநாட்டில் இருந்து வருவோற்கு தனிமைபடுத்தும் காலத்தை குறைக்க அல்லது தனிமைபடுத்தலை நீக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து மக்கள் வெளிநாட்டு பயணம் செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். மக்கள் பலரும் பயண நிறுவனங்களின் இணையதளங்களில் வெளிநாட்டு பயணம் குறித்து ஆர்வமாக தேடி வருகிறார்கள்.

கொரோனா பரவி வரும் சூழல் நிலவுவதால் அவர்கள் தொலைதூரத்தில் உள்ள மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள பயண இடங்களை அதிகம் தேடி வருவதாகவும் இந்த விகிதமானது 40% உயர்ந்துள்ளது எனவும் Expedia நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு முன்பை விட தற்போது அதிக அளவில் சுற்றுலா தலங்கள், உல்லாச தலங்கள், கடற்கரை மற்றும் சாலை பயணத்தை மக்கள் ஆர்வமுடன் விரும்புகிறார்கள். இருந்தாலும் முன்பதிவு செய்வதில் அச்சம் நிலவுவதால் காத்திருந்து பிறகு உறுதிசெய்யலாம் என்ற மனநிலையே மக்களிடம் உள்ளது.

Related posts