TamilSaaga

“சிங்கப்பூரில் திடீர் வெள்ளம்” : 4 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – காணொளி உள்ளே

சிங்கப்பூரில் அநேக இடங்கள் முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 24) அதிகாலை மழை பெய்ததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. சிங்கப்பூரின் தேசிய நீர் நிறுவனம் PUB வெளியிட்ட முகநூல் பதிவில் சிம் டார்பி மையத்திலிருந்து பிஞ்சாய் பூங்காவிற்கு காலை 10.08 மணிக்கு டுனெர்ன் சாலை வரை தீடீர் வெள்ளம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர் Cashew சாலையில் ஏற்பட்ட வெள்ளம் (Video Credits : Singapore Road Accident)

வடிகால் மற்றும் கால்வாய்களில் நீர் நிலைகள் 90 சதவீதத்தை எட்டியதால், அந்த நிறுவனம் நான்கு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது. அந்த பகுதிகள் பின்வருமாறு, ஹேசல் பார்க் டெர்ரஸ் முதல் செஸ்ட்நட் டிரைவ் வரையும் மேல் புக்கிட் திமா சாலை, உட்லண்ட்ஸ் சாலை வெளியேற்ற பகுதி. கிராஞ்சி விரைவு சாலை, சிம் டார்பி மையம் மற்றும் சன்செட் டிரைவ், சன்செட் வே ஆகிய பகுதிகளாகும்.

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக பருவ மழை அதிகரித்துள்ளதால் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் முழுவதும் சிங்கப்பூரின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சிங்கப்பூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related posts