TamilSaaga

சிங்கப்பூர் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்!

ஒரு நாட்டின் பொருளாதார வளம் மேம்பட அந்த நாட்டின் உற்பத்தி பெருகுவது அவசியம். இங்கு தான் உற்பத்தி தொழிற்சாலைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. பல தொழில் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. சிங்கப்பூரிலும் இதுபோல் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

சிங்கப்பூரில் உள்ள வணிக சூழல், பல்வேறு வகையான திறன் சார்ந்த வாய்ப்புகள், புதிய ஆராச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் யாவும் முதலீடு செய்வதற்கான காரணிகளை அதிகப்படுத்துகின்றன. இதன்மூலம் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. இந்த சூழல் நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

அப்படி சிங்கப்பூரின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் முக்கியமான மூன்று நிறுவனங்களைக் குறித்த விவரங்கள் தான் இந்த பதிவு!

1) Applied Materials
2) Makino Asia
3) Proctor & Gamble

1. Applied Materials

1991-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், Semiconductors எனப்படும் குறைக்கடத்திகளை உற்பத்தி செய்வதில் உலகின் மிகப்பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கிறது. சிங்கப்பூரில் அமைந்துள்ள உற்பத்தி தொழிற்சாலை தான் அமெரிக்காவுக்கு வெளியே இயங்கும் இந்த நிறுவனத்தின் மாபெரும் தொழிற்சாலை ஆகும்.

இதன் உற்பத்தி பணியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சிங்கப்பூரின் R&D Ecosystem திட்டத்தில் Applied நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் Agency for Science, Technology and Research, Institute of Microelectronics மற்றும் The National University of Singapore போன்ற பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் பல புதிய கண்டுபிடிப்புகளும் புதுப் புது திட்டங்களும் வகுக்கப்பட்டு நாட்டின் தொழில்வளர்ச்சியை மேலும் மேம்படுத்த முடியும்.

நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 2019-ம் ஆண்டின் Distinguished Partner in Progress என்ற விருதினையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. Makino Asia

நிறுவனம் துவங்கப்பட்டு ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் நிறைவடைந்த நிலையில், சிங்கப்பூரின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டில் இன்றுவரை Makino முக்கிய பங்காற்றிக்கொண்டு இருக்கிறது. சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் தான் ஆசிய கண்டத்தின் தலைமையகம் ஆகும். இங்கு சீனா, இந்தியா மற்றும் பல ஆசிய நாடுகளைச் சார்ந்த பல ஊழியர்கள் பணிபுரிகிறர்கள்.

Makino Asia நிறுவனம் தான் சிங்கப்பூர்-ன் பொருளாதார மேம்பாட்டில் குறிப்பாக Precision engineering துறையில் ஏறத்தாழ 20 சாதிவிதற்கான உற்பத்தியை செய்கிறது. 2019-ல் Advanced Machining Factory மற்றும் IOT- Internet of Things Centre போன்றவற்றை சிங்கப்பூரில் நிறுவியுள்ளது.

ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்க தொடர்ச்சியான மற்றும் சீரான வேலைகளை அமைத்து, அவர்களின் செயல்திறனை வருடம் ஒன்றிற்கு 60 சதவிகிதம் வரை மேம்படுத்துகிறது. மேலும் 2022-ல் additive manufacturing தொழிற்சாலையையும் நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் Institute of Technical Education, Polytechnics, Universities என பல்வேறு கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களின் திறனை மேம்படுத்தும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

3. P & G – Procter & Gamble

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, நாப்கின்கள் போன்ற Personal Care பொருட்களை தயாரிக்கும் இந்த புராக்டர் & கேம்பிள் (P&G) நிறுவனம் சிங்கப்பூரில் தனது 35ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இதனை முன்னிட்டு, சிங்கப்பூரில் புதிய மற்றும் நவீன உற்பத்தி நிலையத்தை அமைக்க S$100 மில்லியனுக்கு மேல் முதலீடு செய்யப் போவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

1987ஆம் ஆண்டு இதன் பயணம் , 100க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட சிறிய விற்பனைக் குளுவாகத் தொடங்கியது. இன்று, 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த 2,300 ஊழியர்களை கொண்ட மிகப்பெரும் நிறுவனமாக திகழ்கிறது. சிங்கப்பூரில் உள்ள P&G நிறுவனம் தான் ஆசிய-பசிபிக் கண்டங்களுக்கான தலைமையகம் ஆகும்.
P&G ன் சிங்கப்பூர் ஆராய்ச்சி மையம் (SgIC) 2014- ஆம் ஆண்டில் 250 மில்லியன் SGD செலவில் துவங்கப்பட்டது. சிங்கப்பூரிலுள்ள மிகப்பெரிய நிறுவன ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக உள்ள SgIC தான் Pantene, Head and Shoulders, Ambi Pur, Vicks மற்றும் Pampers போன்ற உலகின் பிரபல பிராண்டுகளின் முக்கிய கண்டுபிடிப்பு ஆய்வுகூடமாக செயல்பட்டு வருகிறது.

இது போல பல உற்பத்தி நிறுவனங்கள் சிங்கப்பூரின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றன. மேலும் பல நாடுகளில் உள்ள பணியாளர்களை பணியமர்த்துவதன் மூலம் உற்பத்தி மற்றும் மேம்பாடுகளில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகின்றன. இந்த MNC நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் கூடிய எதிர்காலத்தை சிறப்பாக வழங்கி வருவதால் பலர் இந்த நிறுவனங்களில் பணிக்கு சேர விரும்புகின்றனர்.
இந்த நிறுவங்களின் அதிகாரபூர்வ இணையதளங்களில் வேலை வாய்ய்பு அறிவிப்புகள் வெளியிடப்படும். தொடர்ந்து கண்காணித்து உங்களுக்கேற்ற வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

Applied Materials – https://www.appliedmaterials.com/in/en/careers.html
Makino Asia – https://www.makino.com.sg/en-us/about-us/careers
P & G Singapore – https://www.pgcareers.com/global/en/locations/singapore

மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களின் வாயிலாக Sign Up செய்து கணக்குகளைத் துவங்கி, உங்களுக்கான வேலையைத் தேர்ந்தெடுத்திடுங்கள். பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் பொழுது பார்த்தவுடன் விண்ணப்பத்தை சமர்பிக்காமல் பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். நமது தமிழ் சாகா பக்கத்தில் வேலைக்கான விண்ணப்பத்தை சரியாக சமர்ப்பிக்க வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள லிங்க்-கைப் பயன்படுத்தி மேலும் தகவல்களை அறிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்!

https://tamilsaaga.com/news/how-to-apply-for-a-job-effectively/

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts