பாரா பளுதூக்கும் வீராங்கனையான நூர் ‘அய்னி மொஹமட் யஸ்லி உள்பட மேலும் 4 பேர் டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தற்போது தகுதி பெற்றுள்ளனர். நூர் ‘அய்னி மொஹமட் யஸ்லி உள்பட லாரன்ஷியா டான், ஜெம்மா ஃபூ மற்றும் மாக்சிமிலியன் டான் ஆகிய நால்வரும் வரவிற்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரை சார்பாக கலந்துகொள்வார்கள் என்று சிங்கப்பூர் தேசிய பாரா ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.
மேலும் இந்த மாத இறுதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான தேர்வு சுற்றுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் தேசிய பாரா-பவர்லிஃப்டிங் அணியின் முதல் பெண்மணியான நூர் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது முன்னேற்றத்திற்கு தனது தாய் தான் முதல் காரணம் என்று உருக்கமாக கூறியுள்ளார் நூர் ‘அய்னி மொஹமட் யஸ்லி. மேலும் தேர்வாகியுள்ள மற்று மூன்று பேரும் குதிரையேற்ற போட்டிகளுக்காக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாதம் 24ம் தேதியில் இருந்து தொடங்கவிருக்கும் இந்த போட்டிகளில் சிங்கப்பூரை சேர்ந்த வீரர் வீராங்கனைகள்அம்பு எய்தல், தடகளம், மிதிவண்டி போட்டி, குதிரையேற்றம், பளுதூக்குதல் மற்றும் நீச்சல் ஆகிய பிரிவுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.