TamilSaaga

‘மின்சார தேவையில் தன்னிறைவு’ – உலக அளவில் புதிய முயற்சியில் களமிறங்கும் DBS குழுமம்

சிங்கப்பூரின் பிரபலமான டிபிஎஸ் குழுமம் புதிய முயற்சி ஒன்றில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளது. அந்த நிறுவனம் தங்களுக்காக ஏற்கனவே கட்டப்பட்டுள்ள நான்கு மாடி அலுவலக கட்டிடத்தை “ஜீரோ எனர்ஜி” எனப்படும் மின்சார தேவையில் தன்னிறைவு பெற்ற கட்டிடமாக முழுமையாக மாற்றி அமைக்க சுமார் 5 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்யவுள்ளது.

நியூட்டனின் அமைத்துள்ள அவர்களது கட்டிடம் மேற்குறிப்பிட்ட முறையில் முழுமையாக மாற்றப்படவுள்ளது.
மேற்கூறிய இந்த பணிகள் முடிவடையும் அந்த கட்டத்தில் இந்த கட்டிடம் தான் பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் ஈடான மின்சாரத்தை தானே தயாரித்துக் கொள்ளும் என்பது தான் இதன் முக்கிய அம்சம்.

உலக அளவில் இந்த முறையில் மின்சார தேவையில் தன்னிறைவு பெற்றுள்ள 500 கட்டிடங்களின் பட்டியலில் டிபிஎஸ் அலுவலக கட்டடமும் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் மறு வடிவமைப்பு திட்டம் நிறைவேறும் என்றும் அறிவித்துள்ளது டிபிஎஸ்.

மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் உள்ள கட்டிடங்களில் 80 விழுக்காடு வரை பசுமை மயமாக்கும் முயற்சியில் சிங்கப்பூர் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts