இந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சிங்கப்பூர் அரசு கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 9) இந்தோனேசியாவுக்கு மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை அனுப்பி வைத்துள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் இந்தோனேசியாவில் கடந்த வியாழக்கிழமையன்று தினசரி கொரோனா பதிவு 38,391 என்ற அளவை எட்டியுள்ளது. மேலும் 852 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதுவரை அந்நாட்டில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 2.4 மில்லியனுக்கும் அதிகமான COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 63,760 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தோனேசிய அரசுடன் சிங்கப்பூர் அரசு கைகோர்த்து நிற்கும் என்று MFA (Ministry of Foreign Affairs) தெரிவித்துள்ளது. “இந்தோனேசியாவின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, சிங்கப்பூர் அரசு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மற்றும் என் 95 முகமூடிகள், கையுறைகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை ஆரம்பகாலத்தில் வழங்கியுள்ளது சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூருக்கான இந்தோனேசிய தூதர் சூர்யோ பிரடோமோவிடம், பாயா லெபார் விமான தளத்தில் மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினார். இந்தோனேசியவுடன் எல்லாம் நிலையில் சிங்கப்பூர் துணைநிற்கும் என்றும் விவியன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தங்களுக்கு பல உதவிகளை செய்துவரும் சிங்கப்பூர் அரசுக்கு இந்தோனேசி மக்கள் தங்கள் நன்றிகளை நெகிழ்ச்சியுடன் உரித்தாக்கி வருகின்றனர்.