சிங்கப்பூரில் மருத்துவமனை மூலம் பெருந்தொற்று பரவுவதைக் குறைப்பதற்கான இடைக்கால நடவடிக்கை ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 18 வரை சில விதிவிலக்குகளுடன் செயல்படுத்தப்படும் என்றும். இதனால் அனைத்து வார்டுகளுக்கும் பார்வையாளர்கள் வருகை நிறுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 4) தெரிவித்துள்ளது.
மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை உள்ளடக்கிய அதிகமான பெருந்தொற்று வழக்குகள் சமீபத்தில் கண்டறியப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக MOH தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் உருவாகியுள்ள புதிய தொற்று குழுமங்களில் சாங்கி பொது மருத்துவமனை கிளஸ்டரும் ஒன்று என்று MOH தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை, MOH வெளியிட்ட அறிக்கையில், வழக்குகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தது. “ஒரு மருத்துவமனைக்குள் ஏதேனும் வழக்குகள் கண்டறியப்பட்டால், அந்த வார்டு மூடப்படுவதற்கு அது வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட வார்டுக்கு உள்ளேயும் வெளியேயும் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் ஊழியர்களும் தனிமைப்படுத்துதலில் வைக்கப்படுவார்கள். நாளை ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை இந்த தடை நீட்டிக்கப்படும்.