TamilSaaga

“சிங்கப்பூரில் மூதாட்டியை 26 முறை கத்தியால் குத்திய பணிப்பெண்” – குற்றம் நிரூபணமானால் மரண தண்டனைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் தனது முதலாளியின் மாமியாரைக் கத்தியால் குத்திக் கொல்வதற்கு ஒரு நாள் முன்பு வரை அந்த வீட்டுப் பணிப்பெண்ணின் மன நிலை சாதாரணமாகத் தான் இருந்தது என்று, தற்போது சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் கொலை வழக்கில் நேற்று வியாழன் அன்று (ஜனவரி 6) விசாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 25, 2018 அன்று மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஜின் மார் நவே என்ற பணிப்பெண், 70 வயது முதியவரை 26 முறை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் வேலை.. ஆனால் தாயகத்தில் வீடு கட்ட NRI Housing Loan பெற முடியுமா? – என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? Detailed ரிப்போர்ட்

கடந்த 2018ம் ஆண்டு இந்த சம்பவத்தின் போது அவரது பாஸ்ப்போர்ட்டில் அவரது வயது 23 ஆக இருந்தது, ஆனால் விசாரணையில் அவருக்கு 17 வயது என்றும், அவரது வயது குறித்து பொய் சொல்லும்படி அவரது வேலைவாய்ப்பு வழங்கும் முகவரால் அறிவுறுத்தப்பட்டதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவரைக் 26 முறை கத்தியால் குத்தியதை அந்த பெண் மறுக்கவில்லை. இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒரு வயதான பெண் தன்னை துன்புறுத்தியதாக Zin Mar Nwe கூறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் இதற்கு முன்பு சாட்சியமளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழன் அன்று, குற்றம்சாட்டப்பட்ட அந்த பெண்ணின் முதலாளி நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். அப்போது அவர், ஒரு மாதத்திற்கும் மேலாக தனது குடும்பத்திற்காக வேலை செய்த அந்த பணிப்பெண், தனது மாமியாரால் தாக்கப்பட்டதாக தன்னிடம் புகார் அளிக்கவில்லை என்று கூறினார். கொலை நடந்ததாகக் கூறப்படும் ஜூன் மாதம் 2018க்கு ஒரு நாளுக்கு முன்பு, அவரது மாமியார் இரவு உணவிற்கு சப்பாத்தி செய்ததாகவும், பணிப்பெண் டைனிங் டேபிளில் அதை பரிமாற உதவியதும், அப்போது அவர் மகிழ்ச்சியாகவும் புன்னகையுடனும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது மாமியார் உடல் ரீதியா ஒருவரை தாக்கக்கூடியவர் அல்ல என்றும். குடும்பத்தினருக்கு தெரியாமல் அவர் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் சாட்சியமளித்தார். பகுதி நேர ஆசிரியையான தனது மனைவி எனது இரு மகள்களும் அந்த நேரத்தில் பள்ளி விடுமுறை என்பதால் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் இருந்தார்கள் என்று அவர் கூறினார்.

விசாரணை சாட்சிகளில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால், பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் GAG ஆர்டர் காரணமாக பெயரிட முடியவில்லை. Zin Mar Nwe மே 10, 2018ல் குடும்பத்திற்காக வேலை செய்யத் தொடங்கினார். ஜனவரி 5, 2018 அன்று சிங்கப்பூர் வந்த பிறகு அந்த பணிப்பெண் பணிபுரியும் மூன்றாவது குடும்பம் அவர்கள் என்று நேற்று வியாழன் அன்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இந்நிலையில் தான் அந்த வயதான பெண் ஒரு மாத காலம் தங்குவதற்காக மே 26 அன்று இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்தார்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் Jurong East பகுதி.. “நூலிழையில் தப்பிய மூவர்” : பொறுப்பற்று செயல்பட்ட பேருந்து ஓட்டுநர் – Video உள்ளே

ஜூன் 25, 2018 அன்று – விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் முதல் நாள் – இரண்டு பெண்களும் பிளாட்டில் தனியாக இருந்தபோது, ​​பணிப்பெண் சமையலறையிலிருந்து கத்தியை எடுத்து, பாதிக்கப்பட்டவரை பலமுறை குத்தியதாக கூறப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts