TamilSaaga

கொரோனா பரிசோதனை கருவி – புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் மனிதவள அமைச்சகம்

சிங்கப்பூரில் ACE என்ற நிறுவனம் MOM எனப்படும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்துடன் இணைந்து கடந்த ஜூன் 14ம் தேதி முதல் புலம்பெயர்ந்த தொழிலார்களுக்கு பல உதவிகள் செய்து வருகின்றது.

சில தினங்களுக்கு முன்பு ACE நிறுவனம் MOM மற்றும் டெட்டால் நிறுவனத்துடன் இணைந்து பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச கிருமி நாசினி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இனிநிலையில் குறுகிய வசிப்பிடங்களில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சிங்கப்பூர் அரசு முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாக கொரோனா சுய பரிசோதனை கருவிகளை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற டெமோவினை ACE நிறுவனம் செய்துகாட்டியது.

வெளிநாட்டு தொழிலாளர்களின் சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

Related posts