TamilSaaga

“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” : கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வேலைவாய்ப்பு முகவர்கள் மீது கடும் நடவடிக்கை

சிங்கப்பூரில் பணிபுரியும் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியிடம் (Work Pass Holder) அதிக கட்டணம் வசூலித்தால் என்ன நடக்கும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலத்தில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு ஏற்படும் பின்னழகை கண்டறிந்து உடனடியாக அரசு அதை அகற்றி வருவதாகவும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : நம்ம சிங்கப்பூர் : “எதுவுமே இல்லை” என்பதிலிருந்து “எதுவும் சாத்தியம்” என்பதை சாதித்துக் காட்டிய நாடு

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட Facebook பதிவில் “எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க, சிங்கப்பூரில் உள்ள வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டும் பணிபுரியும் ஒரு தொழிலாளியின் நிலையான மாதச் சம்பளத்தில் ஒவ்வொரு ஆண்டு சேவைக்கும் 1 மாதத்திற்கு மேல் வசூலிக்க அனுமதிக்கப்படவில்லை” என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். அதிக கட்டணம் வசூலிக்கப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் MOM-ஐ 6438 5122 அல்லது MWC 6536 2692 என்ற எண்ணில் அழைக்கலாம்.

மனிதவள அமைச்சக பதிவு

தொழிலாளர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூல் செய்துவிட்டு அதை மறைக்கும் வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு 25,000 வெள்ளிக்கு மேல் அபராதம் விதிக்கப்படும் என்றும். மேலும் அவர்கள் EA எனப்படும் சிங்கப்பூரின் employment agencyயாக பணிபுரிய உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மனிதவள அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலும் தொழிலாளரிடம் இருந்து பெறப்பட்ட கூடுதல் தொகையை அவருக்கு வழங்கவும் உதவிர்ப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

ஆகவே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தயங்காமல் தங்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும் பட்சத்தில் அதை உடனடியாக அமைச்சகத்திற்கு தெரிவிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related posts