TamilSaaga

“சிங்கப்பூருக்கு புறப்பட SIA விமானம்” : மற்றொரு விமானத்துடன் லேசாக மோதியதால் ஏற்பட்ட தாமதம்

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூர் வரவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம் ஒன்று கடந்த புதன்கிழமை (நவம்பர் 3) அன்று தரையில் ஏற்கனவே நின்றுகொண்டிருந்த மற்றொரு விமானத்துடன் இந்த விமானத்தின் இறக்கைகள் தொடர்பு கொண்டதால் ஏற்பட்ட சிக்கல்களால் ரத்து செய்யப்பட்டது.
SQ33 சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூருக்கு புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9.50 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி வியாழன் மதியம் 12.50 மணிக்கு) புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, SIA செய்தித் தொடர்பாளர் கூறியது : “கடந்த புதன்கிழமை, நவம்பர் 3, 2021 அன்று, சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்காக டாக்ஸி மூலம் இழுத்து செல்லப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் A350-900 விமானத்தின் இறக்கை தரையில் இருந்த மற்றொரு விமானத்துடன் மோதியது.

இதனால் உடனைடியாக “SIA A350-900 சோதனைக்காக வாயிலுக்கு பாதுகாப்பாக திரும்பியது, மேலும் இதனால் விமானத்தில் இருந்த பணியாளர்கள் அல்லது பயணிகளுக்கு எந்த காயமும் இல்லை என்று செய்தி தொடர்பாளர் கூறினார். இதனையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டது என்றும் பொறியாளர்கள் விமானத்தில் சோதனை நடத்தினர் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார். வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.50 மணிக்குப் புறப்படவிருந்த SQ33 சேவையில் இருந்து ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு SIA உதவி அளித்து, ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து, அவர்களை தங்கவைத்தது.

Flightradar24 மற்றும் FlightAware ஆகியவற்றின் கண்காணிப்பு தரவுகளின்படி, அந்த விமானம் இரவு 10.11 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூர் வரும் வழியில் உள்ளது.

Related posts