TamilSaaga

சிங்கப்பூர் வெளிநாட்டவர்களுக்கு வெறும் 15 வெள்ளியில் தொடங்கப்பட்டிருக்கும் அசத்தல் சேவை…2500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பயன்பெற வாய்ப்பு!

பொதுவாகவே சிங்கப்பூரை பொறுத்தவரை மருத்துவச் செலவு என்பது மிகவும் அதிகம். நம் ஊர்களில் 200 ரூபாய் இருந்தாலே மருத்துவரை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பி விடலாம் ஆனால் சிங்கப்பூரை பொறுத்தவரை ஒருமுறை மருத்துவரிடம் செல்ல குறைந்தது 20 முதல் 40 டாலர் வரை செலவாகும். இதற்காகவே உடல்நிலை சரியில்லா விட்டாலும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் மாத்திரை உட்கொண்டு வீட்டிலேயே சரி பார்த்துக் கொள்வதுண்டு.

இந்நிலையில் சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டவர்களுக்காகவே ஒரு சிறப்பான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.அதாவது சிங்கப்பூரில் உள்ள ஊழியர்கள் 15 வெள்ளி கட்டணம் செலுத்தி பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெளிநாட்டு ஊழியர்களுக்காக பொது மருந்தகத்தை செயல்படுத்தி வரும் ஹெல்த் சர்வ் எனப்படும் அறக்கட்டளை நிறுவனம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம் சிங்கப்பூரில் வாழும் 2500 வெளிநாட்டு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது

பெரும்பாலும் கட்டுமானம், உற்பத்தி , கப்பல் பட்டறை போன்றவற்றில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பல் மருத்துவ சேவை என்பது பராமரிப்பு திட்டத்தில் இல்லாததால் இந்த புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை பொறுத்தவரை ஒரு பல்லை பிடுங்கி சரி பார்ப்பதற்கு 200 வெள்ளி கட்டணம் வரை வசூலிக்கப்படுவதால் தற்பொழுது 30 வெள்ளியில் அதனை வழங்கும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை செயல்படும் இந்த மருந்தகம் கேலாங்கில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts