TamilSaaga

சிங்கப்பூரில் பேட்மின்டன் கனவினை சுமந்த மாணவன் பயிற்சியின் காரணமாக உயிர் இழப்பு… வேதனையுடன் கண்ணீர் வடித்த பெற்றோர்!

சிங்கப்பூரில் உயர்நிலை இரண்டாம் வகுப்பு படிக்கும் பிரணவ் என்ற மாணவன் பேட்மிண்டன் பயிற்சியின் பொழுது உடல்நல குறைவு ஏற்பட்டு அதன் பின்னர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பேட்மிண்டன் ட்ரெயினரை பொறுப்பில் இருந்து நீக்கி சிங்கப்பூர் அரசு முடிவெடுத்துள்ளது.

கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி பேட்மிண்டன் பயிற்சிக்கு சென்ற மாணவர் உடல் உறுதி சோதனையை மாலை 6:30 மணி அளவில் முடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே பயிற்றுவிப்பாளரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று எடுத்துக் கூறினார்.அதற்கு பயிற்றுனர் அவரை சிறிது நேரம் ஓய்வு எடுக்கச் சொன்னார்.சிறிது நேரத்திற்கு பிறகு மாணவர் தண்ணீர் கேட்டபொழுது அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அவரை எழுந்து நிற்கவைக்க முயன்ற பொழுது அவரால் எழுந்து சரியாக நிற்க கூட முடியவில்லை.

அதன் பிறகு உடனடியாக ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு 6:50 மணிக்கு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பிறகு மாணவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 6 நாட்கள் கழித்து பதினொன்றாம் தேதி மாணவர் உயிரிழந்தார். இதயம் சரியாக செயல்படாதது தான் மாணவரின் இறப்பிற்கு காரணம் என மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர். இதனை அடைத்து காவல் துறையினர் புலன் விசாரணை நடத்தினர். அதில் மாணவரின் உடல் நலனை சோதித்த பின்னர் பயிற்சியாளர் அவருக்கு பயிற்சி அளித்து இருக்க வேண்டும் எனவும் அதைச் செய்ய தவறியதால் அவர் மீது தவறு இருப்பதாகவும் வந்தது. மாணவரின் பெற்றோரும் முன்னரே மாணவரின் உடல் நலனில் அக்கறை கொண்டு கவனித்து இருந்தால் தனது மகனை காப்பாற்றி இருக்க முடியும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் உடனடியாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts