TamilSaaga

கொரோனாவால் முடங்கிய இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப.. பணிக்குழு முன்வைத்த 4 முக்கிய அம்சங்கள்

உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்வை அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் வந்துள்ளது. இந்த நிலை மாறி மீண்டும் அச்சமற்ற இயல்புநிலைக்கு மக்களின் வாழ்க்கை திரும்ப வேண்டும். இதனை அடிப்படையாக கொண்டு அமைச்சுகளின் பணிக்குழுவின் இணைத் தலைவர்கள் 4 முக்கிய அம்சங்களை முன்வைத்துள்ளனர்.

நான்கு முக்கிய அம்சங்கள்,

1.தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல்,
2.எளிமையான பரிசோதனை,
3.மேம்படுத்தப்பட்ட சிகிச்சை,
4.சமூக பொறுப்பு.

என்ற இந்த முக்கிய அம்சங்களை திரு. கான் கிம் யோங், திரு. லாரன்ஸ் வோங் மற்றும் திரு.ஓங் யீ காங் ஆகிய இணைத் தலைவர்கள் கூட்டாக அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல்
தடுப்பூசிகள் கொரோனா தொற்று பரவுதலை தடுக்கவும் அதன் தாக்கத்தை குறைக்கவும் செயல்திறன் வாய்ந்தவையாக பல ஆய்வுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

எனவே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுத்து அனைவருக்கு தடுப்பூசி வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது பயன்படுத்தும் தடுப்பூசிக்கு கட்டுக்குள் வராத உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்களை கையாள்வதற்கும் தடுப்பதற்கும் மேம்படுத்தப்பட்ட, நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கக்கூடிய தடுப்பூசிகள் இனி வரும் காலங்களில் நமக்கு தேவைப்படலாம் என்றும் கூறியுள்ளனர்.

எளிமையான பரிசோதனை
கொரோனா பெருந்தொற்று பரிசோதனையை தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த பரிசோதனையானது புதிய மாறுபட்ட அணுகுமுறையுடன் செயல்படுத்த வேண்டும்.

PCR பரிசோதனையை மட்டுமே சார்ந்து இருக்காமல் கொரோனா கண்டறியும் பரிசோதனையானது விரைவாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பது அவசியமானது எனவும் கூறியுள்ளனர்.

மேம்படுத்தப்பட்ட சிகிச்சை
கொரோனா தொற்றுக்கு தரமான சிகிச்சையளிக்கும் முயற்சிகளை உலக நாடுகள் அனைத்தும் முன்னெடுத்து வருகின்றன.

சிகிச்சைக்கு தேவையான வசிதிகளும் மருந்துகளும் தேவையான அளவு இருப்பு வைத்திருப்பதை அரசு உறுதிசெய்து கொண்டு இருக்கிறது.

சமூக பொறுப்பு
கொரோனா என்னும் தொற்றில் இருந்து விடுபட்டு அச்சமின்றி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனைவருக்குமான சமூக பொறுப்புணர்வு மிகவும் அவசியாமான ஒன்றாக உள்ளது என அமைச்சுகளுக்கான பணிக்குழு இணைத் தலைவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Related posts