TamilSaaga

சிங்கப்பூரில் தொழிலாளர்களின் நீண்ட கால பிரச்சனை ஒரு முடிவை எட்டியது…!!

சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் இந்தியாவில் இருந்து கிராஞ்சி பகுதியில் உள்ள ஹாஸ்டலுக்கு செல்ல இரவு பேருந்து வசதி இல்லாததால் சட்டத்திற்கு புறம்பான முறையில் லாரியில் பயணித்து வருகின்றனர் என சமூக ஊடகங்களில் சில வாரங்களுக்கு முன்பு செய்தி வெளியாகின.

இந்நிலையில் சம்பவத்தை கருத்தில் கொண்ட அரசு, ஞாயிற்றுக்கிழமை இரவு தொழிலாளர்கள் ஹாஸ்டலுக்கு செல்ல தனியார் பேருந்து சேவையை வழங்க முன் வந்துள்ளது. லிட்டில் இந்தியா பஸ் சர்வீஸ் எனப்படும் நிறுவனம் வெளிநாட்டு ஊழியர்களுக்காக சேவையினை வழங்கவிருக்கின்றது. தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹாஸ்டலுக்கு செல்ல இரவு வேளையில் இருக்கும் ஒரே பேருந்து இரவு 7.40 மணியளவில் முடித்துக் கொள்வதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக லாரிகளில் பயணம் செய்து விடுதியை அடைந்தனர். எனவே சேவை துவங்கப்பட்டு பேருந்து சேவைக்கு மூன்று வெள்ளி கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 பேர் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச் சேவையின் மூலம் விடுதிகளுக்கு திரும்பும் பயணிகள் பகல் 2 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரியவந்துள்ளது. எனவே சிங்கப்பூரில் தொழிலாளர்களுக்கு இருந்து வந்த பேருந்து பிரச்சனை ஓரளவிற்கு முடிவிற்கு வந்துள்ளது.

Related posts