TamilSaaga

உலகின் சிறந்த விமான சேவை நிறுவனங்கள்.. Top 5வில் இடம்பிடித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – இந்திய நிறுவனங்களின் நிலை என்ன?

உலக அளவில் விமானத் துறைக்கு கடந்த இரண்டு ஆண்டுகள் ஒரு அசாதாரண ஆண்டுகள் என்று தான் கூறவேண்டும். பெருந்தொற்றின் தாக்கம் இன்றளவும் உள்ளது என்றால் அது நிச்சயம் மிகையல்ல, ஆனால் உலக அளவில் தற்போது விமானத்துறை மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த குழப்பமான பயண காலத்தின் மத்தியில், ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட விமானப் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு நிறுவனமான AirlineRatings.com, உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் வருடாந்திர Top 20 பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக “கத்தார் ஏர்வேஸ்” முதலிடத்தைப் பிடித்துள்ளது, AirlineRatings.com வெளியிட்ட தகவலின்படி, கத்தார் ஏர்வேஸ் நீண்ட தூர பயணத்தில் சிறந்து விளங்கும் – மத்திய கிழக்கு/ஆப்பிரிக்கா விருதையும் வென்றுள்ளது.

சிங்கப்பூரில் அடுத்த Toto Draw எப்போ நடக்கும்? Top Prize எவ்வளவு தெரியுமா? – நச்சுனு சில தகவல்கள்

சுற்றுச்சூழல், பாதுகாப்பு சான்றுகள், பயணிகள் அளிக்கும் மதிப்புரைகள் மற்றும் தயாரிப்பு சலுகைகள் ஆகியவற்றை மதிப்பிட்டு இந்த பட்டியலை வெளியிடுகின்றது AirlineRatings.com. இந்த பட்டியலில் சென்ற 2021ம் ஆண்டு 3ம் இடம் பிடித்த நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு சற்று சறுக்கலை சந்தித்து 5ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இரண்டாம் இடத்தை Air New Zealand பிடிக்க, மூன்றாம் இடத்தை அமீரகத்தின் Etihad Airlines பிடித்துள்ளது, korean air நான்காம் இடத்தையும் நமது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 5வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த டாப் 20 பட்டியலில் இந்தியாவின் விமான சேவை நிறுவனங்கள் எதுவும் இடம்பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts