TamilSaaga

ஒர்க் பர்மீட்டில் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரணும்னா இத கட்டாயம் பண்ணனும்… செப்டம்பர் 19 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறை !

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூரில் ஒர்க் பர்மீட்டின் கீழ் வேலை செய்ய வரும் தொழிலாளர்கள் எங்கு தங்க போகின்றார்கள் என்ற விபரங்களை முதலாளிகள் மனித வள அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்ற புது நடைமுறையை சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறையிலிருந்து மலேசியா தொழிலாளர்கள் மட்டும் விதிவிலக்கு பெற்றவர்கள். கட்டுமான தொழில் முதல் கப்பல் பட்டறை வரை அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறையானது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த விதிமுறையின் படி, அவர்கள் சிங்கப்பூருக்கு வரும் முன்பே அவர்கள் தங்கும் இடம் குறித்த தகவலை முதலாளிகள் தெரிவிக்க வேண்டும். அதாவது தொழிலாளிகள் தங்கும் இடத்திற்கான வாடகை ஆவணங்கள், ஒப்பந்த பத்திரங்கள் ஆதாரங்களை முதலாளிகள் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

அதேபோன்று வெளிநாட்டு ஊழியர்கள் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டால் அதற்கும் அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனவும், ஒப்புதல் ஒரு வாரத்திற்குள் கிடைத்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்குமிடங்களுக்கான ஆவணங்களையும் சேர்த்து சரி பார்க்க வேண்டும் என்பதால் வொர்க் பெர்மீட்டுக்கான ஒப்புதல் கிடைப்பதற்கு முன்பு போல அல்லாமல் ஆறு வாரம் அல்லது அதற்கு மேலும் ஆகலாம் என MOM தெரிவித்துள்ளது. முதலாளிகள் ஒருவேளை ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், பெர்மீட்டுக்கான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts