TamilSaaga

சிங்கப்பூர் கன்னிப்பெண்கள் இவரு பின்னாடி ஈ மாதிரி மொய்க்க… அடடா 26 வயசு காளை-னு நினைச்சு பார்த்தா வயசு 56-றாம்! சூர்யாவையும், விக்ரமையும் கலந்து அடிச்ச பொலி காளை இது!

பெரும்பாலாக ஒருவரின் முகத்தினை பார்த்தாலே அவரின் வயது தெளிவாக தெரிந்து விடும். 50 ஆகிவிட்டாலே முகத்தில் சுருக்கம் எல்லாம் வந்துவிடும். இதில் உடற்பயிற்சி செய்யும் சிலருக்கு உடல் இளமையாக இருக்கும். ஆனால் முகத்தில் அந்த முதுமை நன்றாகவே தெரியும்.

இதில் சற்று மாறுப்பட்டவரா இருக்கிறார். சிங்கப்பூரை சேர்ந்த மாடல் சுவாண்டோ டேன். 56 வயதாகும் இவரின் புகைப்படத்தினை பார்த்தால் கண்டிப்பாக இவருக்கா இந்த வயது என ஆச்சரியமாக தான் இருக்கும். பார்ப்பதற்கு அவரின் தோற்றம் 26 என்றே கணக்கிட முடியும். சுவாண்டோ எப்படி இப்படி இருக்கிறார் என அவரிடம் கேட்டப்போது அவர் சொன்ன தகவல்கள் தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சுவாண்டோ டேன் ஒரு புகைப்பட கலைஞராக இருந்தவர். 2015ல் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அதில் தனது படங்களை பதிவிடுவதை வழக்கமாக்கி கொண்டிருந்தார். அப்போது 2017ம் ஆண்டு அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென வைரலானது. அவரை கட்டழகில் மயங்கி அவரை ஃபாலோ செய்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

26 வயது பையன் என ஜொல்லு விட்ட இளம் பெண்களுக்கு பின்னர் தான் தெரிந்ததாம் அவருக்கு உண்மையான வயது 56 என்று. தன் இளமை ரகசியம் குறித்து கூறி இருக்கும் சுவாண்டோ, 20 வயதில் இருந்து காலையில் எப்போதுமே உடற்பயிற்சி செய்து விடுவேன். தினமும் இரண்டு மாடிகள் ஏறி இறங்குவது வழக்கம். காலை உணவாக 6 முட்டை மட்டுமே சாப்பிடுவேன். பசித்தால் சீனி போடாத பழச்சாறுகளை குடிப்பேன்.

மதிய உணவாக பழங்களையும், காய்கறிகளை மட்டுமே எடுத்துக்கொள்வேன். அரிசி உணவை ரொம்ப அரிதாக தான் சாப்பிடுகிறேன். வாரம் இருமுறை சிக்கன் மற்றும் பீப் சாப்பிடுவேன். எனக்கு மது மற்றும் சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் இல்லை எனத் தெரிவித்து இருக்கிறார். சரியாக உணவு பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் செய்தால் எல்லாருமே இளமையாக இருக்க முடியும் எனவும் சுவாண்டோ தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts