TamilSaaga

நாளை (ஜூலை 1) முதல் CMP பெர்மிட்டில் சிங்கப்பூர் வரும் இந்தியர்களுக்கு.. சிறப்பான சலுகையை அறிவித்த சிங்கை – ஒரு Detailed Report

சிங்கப்பூரை பொறுத்தவரை கடந்த மார்ச் 2022 முதல், CMP Work Permit Holderகள் நாட்டிற்குள் வருவதற்கான நுழைவுத் தேவைகள் இங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம். தற்போது உள்ள நிலவரப்படி (ஜூன் 30 வரை) ​​தடுப்பூசி போடப்பட்ட புதிய CMP WPHகள், PDPP உள்ள நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைவதாக இருந்தால், அவர்கள் நிச்சயம் தங்கள் நாட்டில் 2 நாள் PDPPக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

Pre-Departure Preparatory Progamme என்பது தான் PDPP, CMP பெர்மிட் வைத்திருப்பவர்கள் சிங்கப்பூர் புறப்படும் முன் தங்கள் நாட்டில் இரண்டு நாள் தனிமைப்படுத்துதல் முடித்த பிறகே அவர்கள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவர் என்பது தான் இதன் பொருள்.

இந்நிலையில் மனிதவள அமைச்சகம் தற்போது அளித்துள்ள தகவலின்படி நாளை முதல், அதாவது ஜூலை 1ம் தேதி முதல் PDPP தேவைகளை படிப்படியாக குறைக்கவுள்ளது சிங்கப்பூர் அரசு.

இதன்படி IPA வைத்திருக்கும் CMP துறைகளைச் சேர்ந்த அனைத்து மலேசியர் அல்லாத ஆண் WPHகள் சிங்கப்பூர் வரும் முன் இரண்டு நாட்கள் தங்கள் தாய் நாட்டில் மேற்கொள்ளவேண்டிய தனிமைப்படுத்துதல் பணியை இனி அவர்கள் செய்யவேண்டாம்.

இனி சிங்கப்பூரர்களுக்கு தடையின்றி சிக்கன் கிடைக்கும்.. அந்த நாட்டில் இருந்து இறக்குமதி – SFA அறிவிப்பு

ஆனால் வழக்கம்போல சிங்கப்பூருக்கு வந்தவுடன் MOMன் ஆன்போர்டு மையங்களில் தங்கும் ஆன்போர்டிங் திட்டத்தை நிச்சயம் அவர்கள் மேற்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் வருவதற்கு முன், ஆன்போர்டு புக்கிங் சிஸ்டம் மூலம் ஆன்போர்டு மையத்தில் அவர்களுக்கான ஸ்லாட்டை முன்பதிவு செய்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

சிங்கப்பூரர்களுக்கு மேலும் ஒரு பேரிடி.. மூன்றாம் காலாண்டில் உயரும் மின்சார கட்டணம் – உக்ரைன் பிரச்சனை ஒரு காரணமா?

ஆகா இனி (ஜூலை 1 முதல்) இந்தியா, மியான்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து CMP பெர்மிட்டில் வருபவர்கள் தங்கள் தாயகத்தில் quarantine இருக்க வேண்டாம். ஆனால் மற்ற நாடுகளில் இருந்து CMP மூலம் வருபவர்கள் நிச்சயம் முன்பிருந்த அதே PDPP முறையை கடைபிடிக்க வேண்டும்.

சிங்கப்பூரை பொறுத்தவரை தற்போதைக்கு PDPP அமலில் உள்ள நாடுகள் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts