TamilSaaga

சிங்கப்பூர் “LUMINOUS CLEANING & FACILITY MANAGEMENT” நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.. ஏஜெண்ட் இல்லாத நேரடி வேலை.. $6000 முதல் அதிகபட்சம் $10,500 டாலர்கள் வரை சம்பளம்!

SINGAPORE: வேலை வாய்ப்புகளை ஒரே இடத்தில் தன்னகத்தே கொண்டிருப்பதில் “Indeed” தளம் ஒரு சிறந்த வெப்சைட் எனலாம். அந்த வகையில், Indeed தளத்தில் மீண்டும் சிங்கப்பூரில் உள்ள வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, LUMINOUS CLEANING & FACILITY MANAGEMENT எனும் நிறுவனத்தில் மேலாளர் போஸ்ட்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின், WEST POINT BIZHUB, 236 TUAS SOUTH AVENUE 2 637223 எனும் முகவரியில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. Permanent மற்றும் Full Time வேலைக்கு இன்டெர்வியூ நடத்தப்படுகிறது.

அக்கவுண்ட்ஸ் / தணிக்கை / வரி விதிப்பு, நிர்வாகம் / வாடிக்கையாளர் சேவை, F&B, மனித வளங்கள் ஆகிய பிரிவுகளில் 10 வருடம் அனுபவம் உள்ள நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுதவிர, கம்பெனியின் சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள ஊழியரின் பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்த தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்புகள்:

தினசரி வணிக நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல்.

வளர்ச்சி உத்திகளை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல்.

கீழ்நிலை மேலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்.

வரவு செலவுத் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல்.

வருவாயை மேம்படுத்துதல்.

ஊழியர்களை பணியமர்த்துதல்.

செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மதிப்பீடு செய்தல்.

கணக்கியல் மற்றும் நிதி தரவு பகுப்பாய்வு.

வளர்ச்சி வாய்ப்புகளை ஆய்வு செய்தல் மற்றும் அடையாளம் காணுதல்.

ரிப்போர்ட்ஸ் தயார் செய்து அதை மேலதிகாரிகளுக்கு வழங்குதல்

ஊழியரின் தகுதிகள்:

வணிக நிர்வாகத்தில் பட்டம் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம்.

பல்வேறு வணிக செயல்பாடுகள் பற்றிய நல்ல அறிவு.

வலுவான தலைமைத்துவ குணங்கள்.

சிறந்த தகவல் தொடர்பு திறன்.

வலுவான பணி நெறிமுறை.

நல்ல தனிப்பட்ட திறன்கள்.

கணினி அறிவு.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் இருக்கும் பட்சத்தில், இந்த லிங்கை க்ளிக் செய்து நேரடியாக கம்பெனியின் தளத்திலேயே வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இன்றைய தேதி வரை ஏற்கனவே 26 பேர் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, கம்பெனியின் மனிதவளத்துறை அதிகாரியிடம் இருந்து நேரடியாக அழைப்பு வரும். அதன் பிறகு அடுத்தடுத்த நேர்காணல்கள் நடைபெறும். இதில், ஏஜெண்ட் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சிங்கப்பூர் “LUMINOUS CLEANING & FACILITY MANAGEMENT” நிறுவனத்தில் இந்த மேலாளர் போஸ்ட்டுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இந்த பட்டனை க்ளிக் செய்யவும்.

ஆல் தி பெஸ்ட்!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts