TamilSaaga

இனி சிங்கப்பூரர்களுக்கு தடையின்றி சிக்கன் கிடைக்கும்.. அந்த நாட்டில் இருந்து இறக்குமதி – SFA அறிவிப்பு

குளிரூட்டப்பட்ட, உறைந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கான சிங்கப்பூரின் புதிய ஆதாரமாக இந்தோனேசியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) இன்று வியாழக்கிழமை (ஜூன் 30) ​​தெரிவித்துள்ளது.

இது சிங்கப்பூருக்கு கோழி ஏற்றுமதி செய்ய அங்கீகாரம் பெற்ற 20க்கும் மேற்பட்ட நாடுகளின் பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. “சிங்கப்பூரின் உணவு விநியோகத்தைப் பாதுகாக்க அரசாங்கம் நீண்டகாலத் திட்டமிடல் மற்றும் செயலூக்கத்துடன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றும் SFA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 1 அன்று மலேசியா சிக்கன் ஏற்றுமதி தடையை விதித்த பிறகு, சிங்கப்பூர் சமீபத்தில் குளிர்ந்த கோழி விநியோகத்தில் சில இடையூறுகளை எதிர்கொண்டது. சிங்கப்பூரின் கோழி விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு மலேசியாவில் இருந்து தான் வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட குழு ஒன்று சமீபத்தில் இந்தோனேசியாவிற்குச் சென்று அதன் உணவுப் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தணிக்கை செய்து ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இக்குழுவினர் பண்ணைகள், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்கள் மற்றும் ஆய்வகங்கள் போன்ற பல்வேறு வசதிகளை பார்வையிட்டனர். அதன் பிறகு தற்போது இந்தோனேஷியா சிங்கப்பூருக்கு கோழிகளை இறக்குமதி செய்த ஏற்ற நாடக அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts