TamilSaaga

“பன்னாட்டு பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறையை செயல்படுத்தும் இந்தியா” : முழு விவரம்

உலக அளவில் இந்த வைரஸ் பரவ தொடங்கிய காலம் முதல் பன்னாட்டு வர்த்தகம் மற்றும் பயணங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ள நிலையில் பன்னாட்டு விமான போக்குவரத்து என்பது மீண்டும் மெல்ல மெல்ல தொடங்கி வருகின்றது. சிங்கப்பூரில் தற்போதைய நிலவரப்படி 16 நாட்களுக்கு VTL என்ற தடுப்பூசி போடப்பட்ட பயணப்பாதை மூலம் மக்களை நாட்டிற்குள் வரவேற்று வருகிறது.

அதேபோல உலகின் பிற நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள பெருந்தொற்று நிலைக்கு ஏற்ப வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கு பல சலுகைகளை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்டை நாடான இந்தியா வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய தளர்வு ஒன்றை அளித்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் “வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பும், இந்தியா வந்து இறங்கிய பின்பும் எடுக்கப்பட வேண்டிய தொற்று சோதனை இனி அவசியமில்லை” என்று அறிவித்துள்ளது.

இருப்பினும் அவர்கள் வருகையின்போது தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அல்லது அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நேரத்தில் அறிகுறிகள் தென்பட்டால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று அறிவித்துள்ளது.

15.11.2021 முதல், சுற்றுலா நோக்கங்களுக்காக இந்தியாவுக்குச் செல்ல விரும்பும் வெளிநாட்டினர் 06 அக்டோபர் 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு வழங்கப்பட்ட இ-டூரிஸ்ட் விசா/ சுற்றுலா விசாவில் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அத்தகைய விசா/ ETA வழங்கப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களுக்குள் பயன்படுத்தப்படும் மற்றும் புதிய சுற்றுலா விசா/ இ-சுற்றுலா விசா ஆகியவை, நுழைந்த தேதியிலிருந்து 30 நாட்கள் வரை ஒற்றை நுழைவுக்கு செல்லுபடியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முழு விவரங்கள் அறிய..

Related posts