TamilSaaga

“சிங்கப்பூரில் நாய்களை தத்தெடுத்து வளர்த்துவருபவரா நீங்கள்?” – நமது அரசு வெளியிட்ட முக்கிய Update

சிங்கப்பூரில் நாய்கள் மறுவாழ்வு மற்றும் தத்தெடுப்பு நடைமுறைகளை தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஒரு செல்லப்பிராணியைத் தத்தெடுப்பதற்கான பொறுப்புகள் உள்ளடக்கிய புதிய நடைமுறைகள் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) கால்நடை மருத்துவர்கள், நாய் பயிற்சியாளர்கள் மற்றும் விலங்கு நலக் குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது.

“அரபு நாடுகளில் வேலை, மாதம் 60,000 ரூபாய் வரை சம்பளம்” : 7 பிரிவுகளில் வேலை – முழு விவரம் பெற உடனே அழையுங்கள்

கடந்த அக்டோபர் 2020ல் உருவாக்கப்பட்ட இந்த பணிக்குழுவை தேசிய வளர்ச்சிக்கான மாநில அமைச்சர் டான் கியாட் ஹவ் வழிநடத்துகிறார் மற்றும் தேசிய பூங்கா வாரியத்தின் கீழ் உள்ள விலங்குகள் மற்றும் கால்நடை சேவையும் (AVS) இந்த பணியை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வழிகாட்டுதலின்படி ஒரு நாயை எப்போது மறுவாழ்வு செய்ய வேண்டும் என்பதற்கான பரிசீலனைகள் மற்றும் நாயின் உரிமையை புதிய உரிமையாளருக்கு மாற்றுவதற்கான நிபந்தனைகள் ஆகியவை அடங்கும். 

இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, விலங்கு நலக் குழுக்கள் தத்தெடுப்பு அல்லது மறுவாழ்வுக் கொள்கையை உருவாக்க அறிவுறுத்தப்படுகின்றன. அதில் ஒரு நாயை எப்போது ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு மாற்ற வேண்டும் அல்லது எப்போது மாற்றக்கூடாது என்பதற்கான பரிசீலனைகள் மற்றும் நாயின் உரிமையை புதிய உரிமையாளருக்கு மாற்றுவதற்கான நிபந்தனைகள் ஆகியவை இதில் அடங்கும். இது இந்த குழுக்களில் இருந்து தத்தெடுக்கப்பட்ட விலங்குகளை அவர்களின் புதிய வீட்டிற்கு மாற்றுவதை எளிதாக்கும், மேலும் நாயின் மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்று AVS (Animal Veterinary Service) கூறியது.

தத்தெடுக்கப்பட்ட நாயின் நலனில் தீங்கு விளைவிக்கும் என்று நம்புவதற்கான காரணம் இருந்தால், மற்றும் வருங்கால தத்தெடுப்பவர்களுக்கும் நாய்க்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய கவலைகள் இருந்தால் அதை முன்வைத்து விலங்கு நலக் குழுக்கள் நாயை தத்தெடுப்பதை மறுப்பதற்கான அளவுகோல்களின் பட்டியலையும் பகிர்ந்து கொள்ளலாம். தத்தெடுப்பவர் கருத்தில் கொள்ள வேண்டிய நாயின் ஆரோக்கியம் மற்றும் நடத்தை நிலைமைகள் போன்ற தேவைகளைப் பகிர்வதோடு கூடுதலாக, இந்த குழுக்கள் தத்தெடுப்புக்கு முந்தைய ஸ்கிரீனிங் மற்றும் வீட்டு ஆய்வுகளையும் நடத்த வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன.

“வலி தாங்காமல் கத்திய சிறுமி” : வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை – தந்தைக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அளித்த “தரமான தண்டனை”

தத்தெடுப்பு ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் – தத்தெடுப்பவர் மற்றும் விலங்குகள் நலக் குழு ஆகிய இருவராலும் அதில் கையொப்பமிடப்பட வேண்டும். தத்தெடுப்பவரின் விவரங்கள் மற்றும் நாயின் விவரங்கள் மற்றும் இரு தரப்பினராலும் செய்யப்பட்ட அறிவிப்புகள் போன்ற தகவல்கள் அதில் இருக்கும். மேலும் தத்தெடுப்பவர்களுக்கும் விலங்குகள் நலக் குழுக்களுக்கும் இடையே தவறான தகவல்தொடர்புகளைத் தவிர்க்க, கொள்கைகள் தத்தெடுப்பவர்களுக்கு “அவர்களின் கடமைகள் பற்றிய தெளிவான வழிகாட்டுதலை” வழங்க வேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts