TamilSaaga

“Quota இல்லை so Job இல்லை” இந்த dialogue அடி‌க்கடி கேட்டுருப்பீங்க!சிங்கப்பூர்ல இந்த quota எப்படி கணக்கீடு செய்றாங்க தெரியுமா?

சிங்கப்பூர் : வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூரில் quota, levy என இரண்டு வகைபாடுகள் உள்ளன. இவை இரண்டுமே கிட்டதட்ட ஒன்று தான் என்றாலும் சில வேறுபாடுகள் உள்ளது. quota, levy இரண்டும் நாடுகளுக்கு தகுந்தாற் போல் மாறுபடும்.

வெளிநாட்டில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுக்க சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள், அந்த ஊழியர்களுக்கா insurance, levy, ஊழியர்கள் தங்குவதற்கான அறைகளுக்கான கட்டணம் உள்ளிட்ட பல விஷயங்களுக்காக சிங்கப்பூர் அரசிற்கு அந்த நிறுவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஊழியருக்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனம் செலவிடுகிறது. levy என்பது அந்த ஊழியர் சிங்கப்பூரில் இருப்பதற்கு ஒரு நாளைக்கு இவ்வளவு என்ற விகிதத்தில் MOM க்கு அந்த நிறுவனம் கட்ட வேண்டிய தொகையாகும்.

இரண்டு வகையான levy சிங்கப்பூர் அரசால் பெறப்படுகிறது. ஒன்று, அந்த ஊழியர்களின் படிப்பு, தகுதிகள் ஆகியவற்றை பொறுத்தது. மற்றொன்று, work permit, s pass ஆகியவற்றை பொறுத்தது. இவற்றை பொருத்து levy தொகையானது ஒவ்வொரு ஊழியருக்கும் வேறுபடும். ஊழியர்கள் skilled test அடித்து விட்டு வரும் பட்சத்தில் அவர்களுக்கான levy தொகை குறையும். வரும் levy க்கான விதிமுறைகள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். கடைசியாக 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் levy விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான Quota என்பது அந்த நிறுவனத்தில் கடைசி 3 மாதங்களில் பணியாற்றிய மொத்த உள்ளூர் பணியார்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்த Quota ஆனது உற்பத்தி, கட்டுமானம் என துறைகளுக்க ஏற்றபடி மாறுபடும். Quota குறித்து கணக்கிடுவதற்கு MOM இணையதளத்தில் தனியான கால்குலேட்டர் உள்ளது. ஒரு நிறுவனத்தில் s pass, work permit பணியார்கள் எத்தனை பேர் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர் என்பதை பொறுத்தும் Quota மாறுபடும். ஒரு நிறுவனத்தில் ஒரு உள்நாட்டு ஊழியர் இருந்தால், 7 வெளிநாட்டு ஊழியர்களை மட்டும் தான் வேலைக்கு எடுக்க முடியும் என்ற விதிமுறை உள்ளது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts