TamilSaaga

“வலி தாங்காமல் கத்திய சிறுமி” : வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை – தந்தைக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அளித்த “தரமான தண்டனை”

கடந்த 2019ம் ஆண்டு சிங்கப்பூரில் தனது வளர்ப்பு மகளையே பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 47 வயதான சிங்கப்பூர் நபருக்கு 42 மாத சிறைத்தண்டனையும், ஆறு பிரம்படியும் தற்போது தண்டனையாக விதித்து நேற்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) அன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரச்செயல் நடந்தபோது அந்த சிறுமிக்கு வயது வெறும் 12 என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சிறுமிக்கு தற்போது 14 வயது ஆகும் நிலையில் சிங்கப்பூரின் GAG உத்தரவின் கீழ் அந்த தண்டனை பெற்ற நபர் மற்றும் அந்த சிறுமியின் பெயர் வெளியிடப்படவில்லை.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் S Passல் பணிபுரிபவரா நீங்கள்” : உங்களுக்கென்று ஒரு சிறப்பான வாய்ப்பு – உடனே இந்த எண்ணுக்கு அழையுங்கள்

மதர்ஷிப் கண்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் இரண்டு துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் தண்டனையில் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன. அப்போது ஒன்பது வயதாக இருந்த தனது வளர்ப்பு மகனுக்கு எதிராகவும் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் இந்த குற்றங்களைச் செய்யும் போது வேலையில்லாமல் இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அவர் பாதிக்கப்பட்டவரின் தாயை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், மேலும் அவர்கள் இரண்டு அறைகள் கொண்ட ஒரு குடியிருப்பில் ஐந்து குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இரவில், அந்த குழந்தைகள் படுக்கையிலோ அல்லது அறையில் உள்ள மூன்று மெத்தைகளிலோ அல்லது படுக்கையறையில் உள்ள படுக்கையிலோ மாறி மாறி உறங்குவார்கள். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தான் தனது தாயின் முந்தைய திருமணத்தில் பிறந்த நான்கு குழந்தைகளில் மூத்த மகள்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 12, 2019 அன்று காலை, பாதிக்கப்பட்டவர் படுக்கையறையில் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவள் டி-சர்ட் மற்றும் ப்ரா அணிந்திருந்தார் என்றும் மேலும் ஷார்ட்ஸ் மற்றும் பேண்டீஸ் அணிந்திருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. மேலும் அந்த சிறுமியின் இளைய இளைய சகோதரன் அவள் அருகில் படுக்கையில் இருந்தான். அப்போது அந்த சிறுமியை கண்டு உணர்ச்சிவசப்பட்ட அந்த ஆண், அந்த சிறுமியின் உள்ளாடையில் கை வைத்து பாலியலில் சீண்டலில் ஈடுபட்ட நிலையில் அந்த சிறுமி திடுக்கிட்டு ஏலவே அங்கிருந்து அவர் கிளம்பி அலுவலகம் சென்றுள்ளார். இதனை உடனடியாக அந்த சிறுமி தனது பெற்ற தந்தைக்கும் தாய்க்கு தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் Jurong West பகுதியில் தீ” : 45 பேர் வெளியேற்றம், 5 பேர் மருத்துவமனையில் – எங்கு தீ பிடித்தது?

இதனையடுத்து மீண்டும் அக்டோபர் 1 2019ம் ஆண்டு மீண்டும் அதே செயலை செய்ய அந்த சிறுமியை அணுகி தனது உறுப்பை அவளுக்கு செலுத்த முயற்சித்த நிலையில் சிறுமி வலிதாங்காமல் அலற அவளது தாய் அங்கு வந்துள்ளார். உடனே அந்த நபர் சமயலறைக்கு சென்றுள்ளார். இந்த நிகழ்வையும் அந்த சிறுமி தனது சொந்த தந்தையிடம் கூற அக்டோபர் 2ம் தேதி 2019 அன்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts