TamilSaaga

“சிங்கப்பூரின் தெற்கு தீவுகளுக்கு புதிய Ferry சேவை” : விரைவில் அமலாகும் சென்டோசாவின் நிலைத்தன்மைத் திட்டங்கள்

சிங்கப்பூரில் சென்டோசாவிலிருந்து தெற்கு தீவுகளுக்குச் செல்வது விரைவில் செண்டோசா கோவ் கிராமத்தில் புதிய Jetty எனப்படும் படகு போக்குவரத்துக்கு வரும் டிசம்பர் மாதத்திற்குள் தனது சேவைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயின்ட் ஜான்ஸ் மற்றும் லாசரஸ் தீவு உள்ளிட்ட தெற்கு தீவுகளுக்கு செல்பவர்களுக்கு, சைக்கிள் சுற்றுப்பயணம் மற்றும் Glamping எனப்படும் சொகுசு டென்ட் வசதிகள் செய்து தரப்படவுள்ளது. மேலும் அவர்களுக்கு Droneகள் மூலம் உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செண்டோசா மற்றும் அண்டை தீவுகளின் தனித்துவமான பாரம்பரியம் மிக்க செயல்பாடுகள் மூலம் பார்வையாளர்களை ஒரு புதிய தொடர் நிலைத்தன்மை-கருப்பொருள் கொண்ட சுற்றுப்பயணகளுக்கு அழைத்துச்செல்ல டிசம்பர் முதல் படிப்படியாக திட்டங்கள் தொடங்கப்படும் என்று சென்டோசா மேம்பாட்டுக் கழகம் (SDC) இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசின் இந்த முயற்சி வரும் 2030ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை அதிக அளவில் குறைந்து சிங்கப்பூரை ஒரு நிலையான சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான தீவின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இன்று வெள்ளிக்கிழமை, SDC நிலைத்தன்மை இலக்குகளை கொண்ட ஒரு சாலை வரைபடத்தை அறிமுகப்படுத்தியது. இதில் பசுமை போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். மேலும் வருகிற 2025ல் செண்டோசாவுக்கு வருகை தருபவர்கள், தீவைச் சுற்றிப்பார்க்க மின் சக்தியால் இயங்கும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும். சிங்கப்பூர் அரசு கடந்த சில வருடங்களாக சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்க மின் மயமாக்களை ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ComfortDelGro பேருந்துடன் கூடிய மின்சார பேருந்துகளின் சோதனை அடுத்த மாதம் தொடங்கும் என்று SDC தெரிவித்துள்ளது. 2030க்குள், எஸ்டிசி-க்கு சொந்தமான அனைத்து கார் பார்க்குகளும் மின்சார வாகன சார்ஜிங் வசதி செயல்படுத்தப்படும். மேலும் SDC-க்கு சொந்தமான அனைத்து புதிய கட்டிடங்களும் கிரீன் மார்க் பிளாட்டினம் சூப்பர் லோ எனர்ஜி எனப்படும் SLE சான்றிதழ் பெரும் நோக்கில் கட்டப்படும். சென்டோசாவின் நிலைத்தன்மையின் சாலை வரைபடத்தை அறிமுகப்படுத்திய போது, ​​வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆல்வின் டான், சிங்கப்பூர் தனது சுற்றுலாத் துறையை பசுமையாக்குவதற்கான ஒரு “லட்சிய” நடவடிக்கையை அமல்படுத்தி வருகின்றது என்று கூறினார்.

“சிங்கப்பூர் பசுமைத் திட்டத்திற்கு ஏற்ப சிங்கப்பூரை மாற்றுவதற்கான எங்கள் திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துச் செல்லும்போது, ​​இத்தகைய ஒத்துழைப்புகள் நன்மை பயக்கும் மற்றும் அவசியமானதாக இருக்கும்” என்றும் அவர் கூறினார். சிங்கப்பூர் அதிகரிக்கும் புவி மாசுபாடு மற்றும் வெப்பமயமாதலை தடுக்க பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக சுற்றுலா தளங்கள் மற்றும் விலங்கியல் பூங்காக்கள் போன்ற இடங்களில் மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களை இயக்க முயற்சிகளை தொடர்ந்து அமல்படுத்திக்கொண்டே வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts