சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், வழக்கின் வாதத்தின்போது நீதிபதிகளை குறுக்கிட்டு, அவர்களைப் பாரபட்சமான முறையில் இருப்பதாக கூறிய நிலையில் அவர் நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. M ரவி என்று அழைக்கப்படும் ரவி மாடசாமி, அட்டர்னி ஜெனரல் லூசியன் வோங்கால் அவர்களின் உத்தரவுகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு முகநூல் பதிவில், திரு. ரவி இந்த விண்ணப்பங்களைக் கண்டு நான் வியப்படையவில்லை என்றும், தனது நடத்தைக்கான காரணங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைப்பேன் என்றும், சேனல் நியூஸ் ஏசியா வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. நவம்பர் 2021ல் உயர்நீதிமன்றம் மற்றும் மாநில நீதிமன்றங்களில் இரண்டு தனி நீதிமன்ற நடவடிக்கைகளின் போது திரு. ரவியின் நடத்தை தொடர்பான விண்ணப்பங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரலின் நிலைப்பாடு என்னவென்றால், “அந்த இரண்டு வழக்குகளிலும் வழக்கறிஞர் “அந்தந்த நீதிமன்றங்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்டார்” என்பது தான் என்று AGC (Attorney General’s Chamber) கூறியது. மேலும் இதில் “நீதிபதிகளுக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது” மற்றும் “வழக்கின்போது நீதிபதிகளை தொடர்ந்து குறுக்கிட்டது” ஆகியவை அடங்கும்.
நீதி நிர்வாக (பாதுகாப்பு) சட்டம் 2016ன் படி, திரு. ரவியின் நடத்தை குறித்து உயர்நீதிமன்றம் மற்றும் மாநில நீதிமன்றங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் அட்டர்னி ஜெனரலிடம் தனித்தனியாக புகார் அளித்தன என்று AGC தெரிவித்துள்ளது.