TamilSaaga

“ஆக்டோபரின் இரண்டாம் பாதி” : சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை பெய்யும்” – வானிலை ஆய்வு மையம்

சிங்கப்பூரில் 2021ம் ஆண்டின் அக்டோபரின் இரண்டாவது பாதியில் அதிக இடியுடன் கூடிய மழை பரவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் நேற்று அக்டோபர் 15 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. காற்றின் நிலை மாற்றமும், தென்மேற்கு பருவமழை முடிவடைவதையும் மேலும் பருவமழைக் காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. லேசான மாறுபட்ட காற்று, வெப்பமான வானிலை மற்றும் இடியுடன் கூடிய மழை, மழைக்கால இடைவெளி நவம்பர் 2021 வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத்தில் பெய்யும் பருவமழையின்போது மின்னல்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பதினைந்து நாட்களுடன் ஒப்பிடுகையில் அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் சிங்கப்பூரின் பல பகுதிகள் ஈரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான நாட்களில் காலை மற்றும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழையை மக்கள் எதிர்பார்க்கலாம். நிலப்பகுதிகளின் பகல் நேர வெப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் ஒருங்கிணைப்பு காரணமாக இது ஏற்படுகிறது.

மேலும் இந்த மாதத்தில் சில நாட்களில் சிங்கப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று பெரிய அளவில் ஒன்றிணைவதால், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தென்மேற்கு அல்லது தென்மேற்கில் இருந்து வீசும் குறைந்த-காற்றுடன், நிலவும் தென்மேற்கு பருவமழை நிலைகள் படிப்படியாக பலவீனமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மலாக்கா ஜலசந்தியில் இருந்து தென் சீனக் கடலுக்குச் செல்லும் சுமத்ரா சூறாவளி காரணமாக, சிங்கப்பூர் முழுவதும் காலையில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

அக்டோபரின் முதல் பாதியில் எதிர்பார்த்ததை விட சராசரிக்கும் குறைவான மழை மட்டுமே பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அக்டோபரின் இரண்டாம் பாதியில் சராசரிக்கு மேல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 2021-க்கான ஒட்டுமொத்த மழையை சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts