சிங்கப்பூர்: இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் சுமார் 23,000 அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது சேவை பிரிவு (PSD) நேற்று (ஜூன் 5) இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக, சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கான சம்பளம் கடைசியாக 2014-ல் மாற்றியமைக்கப்பட்டது, அப்போது நடுத்தர அரசு ஊழியர்களுக்கு சுமார் 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தற்போது 16 அமைச்சகங்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சட்டப்பூர்வ வாரியங்களில் சுமார் 153,000 பொது அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இவர்களில் சுமார் 87,000 பேர் அரசுப் பணியாளர்கள்.
இந்நிலையில், நிர்வாக அதிகாரி, நிர்வாக ஆதரவு மற்றும் பெருநிறுவன ஆதரவு திட்டங்களில் உள்ள அரசு ஊழியர்கள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஊதிய உயர்வுகளைப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குறைந்த ஊதிய தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான முத்தரப்பு பணிக்குழுவின் அறிவிப்பின் படி, அரசின் support scheme திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 6 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை ஊதிய உயர்வு பெற உள்ளார்கள்.
எனினும், வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பொது ஊழியர்களின் அடிப்படை ஊதிய உயர்வு குறித்து அறிக்கையில் எந்த தகவலும் இடம் பெறவில்லை.
News Source: THE STRAITS TIMES