TamilSaaga

திருச்சி ‘டூ’ சிங்கப்பூர்.. 2022-ல் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்த டிக்கெட் விலை – 100 டாலரை விட குறைவு – சர்பிரைஸ்!

சமீபகாலமாக திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கும், அதேபோல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்குமான விமான சேவை கட்டணம் மிக அதிகளவு உயர்ந்திருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20,000 தொடங்கி ரூ.40,000 வரை டிக்கெட் கட்டணம் இருந்தது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்ததால் சிங்கப்பூருக்கு விடுமுறைக்கு சென்றிருந்தவர்கள் ஊர் திரும்பியதும், அதே போல், இந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் கோடை விடுமுறை என்பதால் சிங்கப்பூரில் இருந்து அதிகளவு பயணிகள் தமிழகம் வந்ததுமே இந்தளவுக்கு டிக்கெட் உயர்ந்ததற்கான காரணமாக அமைந்தது.

இந்நிலையில், தற்போது திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமான கட்டணம், இந்த வருடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

ஸ்கூட் விமானங்களில் வரும் ஆகஸ்ட் 17, 2022 முதல் அக்டோபர் 21, 2022 வரை Baggage இல்லாமல் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல கட்டணம் ரூ.5,018 மட்டும் தான்.

அதேபோல், ஸ்கூட் விமானங்களில் வரும் நவம்பர் 1, 2022 முதல் அக்டோபர் 30, 2022 வரை Baggage இல்லாமல் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல கட்டணம் ரூ.5,018 மட்டும் தான்.

மேலும் படிக்க – வாழ்த்துகள்! சிங்கப்பூரில் அரசு ஊழியர்களின் சம்பளம் 14% வரை உயர்வு! வெளிநாட்டு ஊழியர்கள் மீதும் கொஞ்சம் மனம் வைக்கலாம்!

சிங்கப்பூர் டாலர் மதிப்பில் செல்ல வேண்டுமெனில், திருச்சியில் இருந்து சிங்கை செல்வதற்கான கட்டணம் S$95 மட்டுமே.

இதில் மற்றொரு வசதி என்னவெனில், கட்டணம் செலுத்திய பிறகும் கூட பயண தேதியை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், டிக்கெட் Cancel செய்யப்பட்டால், கட்டணம் Refund ஆகாது என்று ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், Baggage பொறுத்தவரை 20 கிலோ வரையிலான பொருட்களுக்கு ரூ.2,520 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த 2022ம் ஆண்டில், இவ்வளவு குறைவான டிக்கெட் விலை இதுவரை இருந்ததில்லை. எனவே, இந்த நேரத்தை பயன்படுத்தி திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வது உங்கள் செலவை கணிசமாக மிச்சப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

News Source:

விமான டிக்கெட் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி 620 007
97 91 477 360

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts