TamilSaaga

சிங்கப்பூரின் தேசிய தினம்.. 5 இடங்களில் விண்ணைப் பிளக்கும் வாணவேடிக்கை – எல்லோருக்கும் அனுமதி உண்டா?

சிங்கப்பூரில் இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பு (NDP) ஆகஸ்ட் 9 ஆம் தேதி வழக்கம்போல The Float Marina Bayல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் பல நிகழ்வுகள் சிங்கை முழுவதும் வரிசை வரிசையாக நிகழ உள்ளன. ஆனால் சிங்கப்பூரர்களாகிய நம்மக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயமும் தேசிய தினத்தில் அரங்கேறவுள்ளது.

அது தான் பட்டாசுகள், அதுவும் இந்த முறை The Float Marina Bayயில் மட்டுமல்லாமல் சிங்கப்பூரின் மேலும் ஐந்து முக்கிய இடங்களில் இந்த வண்ணமிகுந் கண்காட்சி நடக்கவிருக்கிறது. அந்த இடங்கள் பின்வருமாறு..

Jurong West Stadium
Woodlands Stadium
Open field beside Ang Mo Kio library
Bedok Stadium
Former Tampines Junior College (TPJC) உள்ளிட்ட இடங்களில் இந்த வாணவேடிக்கை நடைபெறும்.

தேசிய தினத்தன்று இரவு 8.15 மணி முதல் 8.25 மணி வரை 10 நிமிடங்களுக்கு இந்த பட்டாசு வெடிக்கும் நிகழ்வு நடக்கும்.

சிங்கப்பூரில் வேலை.. எதிர்கால கனவுகளோடு கோவையில் காத்திருந்த இளைஞர்கள் – மீண்டும் அரங்கேறிய மோசடி

அதேபோல அந்தந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இருக்கை வசதிகளுக்கு உட்பட்டு முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் (First Come First Serve) பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் இந்த ஐந்து இடங்களில் NDP நிகழ்ச்சியின் நேரடி திரையிடல் இருக்காது, இவை முற்றிலும் வாணவேடிக்கைகளுக்கு மட்டுமே.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts