TamilSaaga

சிங்கப்பூரில் உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி? – இதுவரை இல்லாத ஒரு Complete Report

சிங்கப்பூரில் உங்களுடைய பாஸ்போர்ட் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்களில் ஏதேனும் ஒன்றில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்களில் இந்த விண்ணப்பத்திற்கு சேவை கட்டணமாக S$10.80 நீங்கள் செலுத்த வேண்டும். அதற்கான விண்ணப்ப படிவத்தை www.hcisingapore.gov.in என்னும் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது தூதரகத்தில் இருந்து அல்லது பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்களிலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, passport.singapore@mea.gov.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும். ஆன்லைன் வழியாகவும், நேரடியாக தூதரகம் வாயிலாகவும் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியும்.

மேலும் படிக்க: “நான் செத்துவிடக் கூடாது”.. சிங்கப்பூரில் தன்னுடைய 3 பிள்ளைகளுக்காக.. 3 இடங்களில் இரவு பகலாக உழைக்கும் தாய் – கணவன் விட்டு ஓடினாலும் சிங்கை கைவிடாது!

நேரில் சென்று விண்ணப்பிப்பது எப்படி?

நேரில் சென்று விண்ணப்பிக்கும் முறையில் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, புதுப்பிக்கப்பட்ட புதிய பாஸ்போர்ட்டை அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்ப மையங்களில் பெறுவதற்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகும். மேலும் விவரங்களை https://eservices.ica.gov.sg/esvclandingpage/apples என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். நேரிடையாக சிங்கப்பூர் தூதரக அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க 3-5 வாரங்கள் ஆகும். இந்த 2 முறைகளில் விண்ணப்பிப்பதாலும் பாஸ்போர்ட்டை தூதரக அலுவலகத்தில் தான் பெற்று கொள்ள வேண்டும்.

பெறுவதற்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆக வாய்ப்பு உண்டு. புதிய கடவுச்சீட்டு தயாராகியவுடன் சிங்கப்பூர் ஹை கமிஷன் அலுவலகத்திலிருந்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் தேவையான ஆவணங்களுடன் நீங்கள் நேரில் சென்று புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

ஆன்லைனில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி?

இந்த வசதி பயண ஆவணத்திற்கு விண்ணப்பிக்க உங்களை அனுமதிக்கிறது.
உங்கள் பாஸ்போர்ட்டை நீங்கள் சேதப்படுத்தியிருந்தால் அல்லது தொலைத்துவிட்டால், அதை உடனடியாக ICA க்கு தெரிவிக்க வேண்டும்.

பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது பின்வரும் தகவல்களை தயாராக வைத்திருக்கவும்.

  1. விண்ணப்பதாரரின் அடையாள அட்டை எண்/பிறப்புச் சான்றிதழ் எண்/குடியுரிமைச் சான்றிதழ் எண்
  2. விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் காலாவதி தேதி
  3. விண்ணப்பதாரரின் சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான வண்ணப் புகைப்படம் (கடந்த மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்)
  4. விசா அல்லது மாஸ்டர் கிரெடிட்/டெபிட் கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு அல்லது இன்டர்நெட் பேங்கிங் விவரங்கள்.

ஹோ சி மின் நகரில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை:

தேவையான ஆவணங்கள்:

அ. சிங்கப்பூர் பயோமெட்ரிக் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவம் IMME 11பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

சமீபத்தில் நீங்கள் எடுத்த வண்ண புகைப்படம் (அளவு 2 inch X 2 inch) (5.1 X 5.1 cm) வெள்ளை நிற பின்னணியுடன், கடந்த 6 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
NRIC / EP / SP / DP / WP போன்ற அடையாள அட்டை மற்றும் அந்த ஆவணங்களின் நகல்கள்.
சிறுவர்களுக்கு பாஸ்போர்ட்களை புதுப்பிக்க, பெற்றோரின் பாஸ்போர்ட்களின் நகல்களும் சமர்ப்பிக்கலாம்.

கட்டண விவரம்

36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்டிற்கு S$100.00 செலுத்த வேண்டும்.
15 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்கு S$65.
60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட் கையேட்டிற்கு S$130.00 ரொக்கமாக செலுத்தப்பட வேண்டும்.

3-5 வாரங்களில் பாஸ்போர்ட்

பொதுவாக 3-5 வாரங்களில் புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் கிடைக்கும்.

விண்ணப்பிக்க வேண்டிய இடம்:

தூதகரகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 முதல் 11.30 வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம். இதற்காக எந்த முன்பதிவும் அவசியமில்லை.

பாஸ்போர்ட் வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் அவசர சேவைகள் (தட்கல் சேவை):

பாஸ்போர்ட் விண்ணப்பதாரருக்கு எதிராக எந்த தடையும் இல்லாத பட்சத்தில், உண்மையாக அவசரம் இருக்கும் பட்சத்தில், அடுத்த நாள் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்க இந்த சேவை உதவுகிறது.

கட்டணம்:

விண்ணப்பத்தின் போது VND 1,340,000 பணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கான குறிப்பு

புதிய பாஸ்போர்ட்டைப் பெற்றவுடன், பழைய பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு, உங்களிடம் திருப்பித் தரப்படும்.

புதிய பாஸ்போர்ட் எண் பழைய பாஸ்போர்ட்டில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். உங்களிடம் பழைய பாஸ்போர்ட் எண்ணுடன் இணைக்கப்பட்ட விசா/அனுமதி இருந்தால், நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதற்கு முன்பு உள்ளூர் குடிவரவு அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட்டுக்கு மாற்றப்பட வேண்டும்.

பயணிகளுக்கான அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான நாடுகளில், உங்கள் பாஸ்போர்ட்டை 6 மாதத்திற்கு முன்கூட்டியே புதுப்பிக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

சிங்கப்பூருக்கு நேரடியாகத் திரும்பும் சிங்கப்பூரர்களுக்கு, 6 மாதங்களுக்கும் குறைவான செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை பயன்படுத்தலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், விமான டிக்கெட்டுகள் நேரடியாக விமான நிறுவனம்/சேவை வழங்குனரிடம் மட்டுமே வாங்கப்படும் (ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்குவது அல்ல).

பாஸ்போர்ட்டை நேரில் பெறுதல்

புதிய பாஸ்போர்ட் தயாராகியவுடன் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.அந்நேரத்தில் தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்று பாஸ்போர்ட்டை பெற்று வரலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts