சிங்கப்பூரில் வரும் செவ்வாய்கிழமை (மார்ச் 15) முதல் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்படும் என்று சிங்கப்பூரில் தொற்றுநோயைக் கையாளும் பல அமைச்சக பணிக்குழு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நெறிப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் கடந்த பிப்ரவரி 25 முதல் நடைமுறைக்கு வரும் என்று பணிக்குழு ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது, ஆனால் கடந்த சில வாரங்களாக நாட்டில் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வந்த காரணத்தால் இந்த நடவடிக்கை சில காலங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மற்றொரு “Happy News” – மார்ச் 15 முதல் “புதிய விதி” அமல்
சரி சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்த பெருந்தொற்று குறித்த நடவடிக்கைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு காணலாம்.
வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் (பார்வையாளர்) எண்ணிக்கை
வரும் மார்ச் 15 முதல், ஒரு குடும்பத்திற்கு தனித்தனியாக வருபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு ஐந்து என்று இருந்த நிலையில் தற்போது எந்த நேரத்திலும் ஐந்து பேர் கொண்ட குழு வரலாம் என்று மாற்றப்படவுள்ளது. அனுமதிக்கப்பட்ட குழு அளவு ஐந்து நபர்கள் மட்டுமே என்பதையும் நாம் மனத்தில்கொள்ளவேண்டும்.
முகக்கவசம் அணிவது
மார்ச் 15 முதல், மக்கள் தங்களுக்கு இடையிலான பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்கும்போது முகக்கவசம் தேவையில்லை. (இருப்பினும் முகக்கவசம் அணிந்திருந்தாள் இன்னும் சிறந்தது) அப்படி போதிய இடைவெளியை கடைபிடிக்க முடியவில்லை என்றால் நிச்சயம் முகக்கவசம் அணியவேண்டும்.
பொது நிகழ்வில் கலந்துகொள்ளுதல்
மக்கள் திருமணம், இறுதிச்சடங்கு, அலுவலக மீட்டிங், மதம் சார்ந்த கூட்டம் உள்ளிட்டவற்றில் கலந்துகொள்ளும்போது அந்த நிகழ்வு நடக்கும் இடத்திற்கு ஏற்ப மக்களின் அளவு மாறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு இத்தனை பேர் மட்டுமே கலந்துகொள்ளமுடியும் என்ற கட்டுப்பாடு இருக்காது. ஆனால் அது 1000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் நிகழ்வு என்றால் நிச்சயம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
விளையாட்டு நிகழ்வுகள்
மார்ச் 15 முதல், அனைத்து விளையாட்டுகளும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 30 நபர்களுடன் நடைபெற அனுமதிக்கப்படும். அதாவது வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் உட்பட அனைவரும் சேர்த்து 30 பேர் வரை கலந்துகொள்ளலாம். அதுவும் ActiveSG மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் வசதிகளில் தொடர அனுமதிக்கப்படும்.
வெளிநாட்டு பயணிகளுக்கான தளர்வு
இந்தியா போன்று தற்போது குறைந்த தொற்றுள்ள நாடுகள் மற்றும் VTL சேவைகள் அமலில் உள்ள சில நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும், இனி சிங்கப்பூருக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் “அதிகாரிகளின் மேற்பார்வையின்றி” ஆன்டிஜென் ரேபிட் சோதனையை (ART) விரைவில் மேற்கொள்ள முடியும். அவர்கள் சிங்கப்பூர் வந்த 24 மணிநேரத்திற்குள் சோதனைகளை மேற்கொண்டு இணையத்தில் பதிவேற்றலாம்
முக்கியமான தளர்வு – புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தளர்வு
மார்ச் 15 முதல், தடுப்பூசி போடப்பட்ட 15,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வார நாட்களில் சமூகத்தைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள், இந்த அளவு இதற்கு முன்பு 3,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில், அதிகபட்சமாக 30,000 தொழிலாளர்கள் சமூகத்தை பார்வையிடலாம், இதற்கான நேர அளவு 8 மணிநேரம்.