TamilSaaga

வெளிநாட்டு ஊழியர்கள் மீது சிங்கப்பூரில் வெறுப்பு இல்லை; But “அசாத்திய திறமை” உள்ளவர்களே இனி தேவை – அமைச்சர் டான் சீ லெங்

சிங்கப்பூரில் உள்ளூர்வாசிகள் வேலை வாய்ப்புகளை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தட்டிப்பறிக்கிறார்கள் என்று ஒருசாரார் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள், அதிக அளவில் சிங்கப்பூரர்கள் வேலை வாய்ப்புகளை குறைப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இதில் நிதர்சனம் என்னவென்றால், பல சிங்கப்பூர் நிறுவனங்களே தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை விட, இந்திய தொழிலாளர்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றன.

இதற்கு மிக முக்கிய காரணம், இந்திய ஊழியர்கள் அதிக நேரம் உழைக்கக்கூடியவர்கள். சிங்கப்பூரர்கள் 8 மணி நேரம் தான் வேலை செய்வார்கள். OT (Over Time) பார்க்கச் சொன்னால், இரட்டிப்பு சம்பளம் கேட்பார்கள். இந்திய ஊழியர்கள், OT பார்த்தால் என்ன ஊதியம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சிங்கப்பூரர்கள் இரட்டிப்பு ஊதியம் கொடுத்தாலும் வேலை பார்க்க மாட்டார்கள். ஆனால், இந்திய ஊழியர்கள் அன்றைய தினமும் உழைப்பார்கள். இவையெல்லாம் தான் சிங்கப்பூர் நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர்களை நோக்கிச் செல்ல காரணமாக அமைகிறது.

மேலும் படிக்க – சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மற்றொரு “Happy News” – மார்ச் 15 முதல் “புதிய விதி” அமல்

எனினும், சிங்கப்பூர் அரசுக்கு தலைவலியாக இருப்பதும் இந்த விஷயம் தான். உள்ளூர் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயம், ஆளும் சிங்கப்பூர் அரசுக்கு உள்ளது. அதை மனதில் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. ஆகையால் தான், இப்போது இந்திய ஊழியர்களால் S pass வாங்குவது என்பது அவ்வளவு கடினமான ஒன்றாக மாறியுள்ளது. சிங்கை அரசு பார்த்து பார்த்து, அதிக அளவு Filter செய்தே S pass கொடுக்கிறது.

இந்நிலையில், Bloomberg தளத்துக்கு பேட்டியளித்துள்ள நமது சிங்கையின் மனிதவளத் துறை அமைச்சர் டான் சீ லெங் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் பேசுகையில், “சிங்கப்பூர் ஒரு உலகளாவிய நகரமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் அதே வேளையில் உள்ளூர்வாசிகளின் வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதிய புள்ளிகள் அடிப்படையிலான விசா முறையின் கீழ் ‘அதிக திறன்’ கொண்ட வெளிநாட்டு ஊழியர்களைகளை மட்டும் ஈர்க்க முயல்கிறோம்” என்று அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், உயர் திறமை வாய்ந்த, அசாத்திய திறமைகள் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் மட்டும் இங்கு வரும்படி முயற்சிகள் செய்கிறோம். கல்வி மற்றும் திறன்கள் பொறுத்தே அதிக ஊதியம் பெறும் தொழிலாளர்களின் நுழைவை அனுமதிக்கும் விசா விதிகளில் மிகப்பெரிய மாற்றங்களை நாங்கள் கடந்த வாரம் அறிவித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு “நற்செய்தி”… தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல அதிக தளர்வு – MOH அறிவிப்பு

தொடர்ந்து பேசிய அமைச்சர், “வெளிநாட்டவர்களுக்கு எதிரான பரவலான வெறுப்பு சிங்கப்பூரில் இல்லை. அதேசமயம், கதவைத் திறந்து ஒவ்வொருவரையும் உள்ளே அனுமதிப்பதற்குப் பதிலாக, நாம் சொல்ல விரும்புவது என்னவென்றால், நாம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும். திறமையான ஆட்களை மட்டுமே எடுக்க வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில், E pass-களில் இருந்து வெளியேறுவோருக்கு பதில் இனி திறமையான வெளிநாட்டு ஊழியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த வாரம் MOM வெளியிட்ட அறிவிப்பில், சிங்கப்பூரில் வரும் செப்.2023 முதல் Employment Pass (EP) எடுக்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள், Complementarity Assessment Framework (Compass) கீழ் குறைந்தபட்சம் 40 புள்ளிகள் எடுத்தாக வேண்டும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதை முன்னிட்டு இப்போது அமைச்சர் டான் சீ லெங் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts