TamilSaaga

சிங்கப்பூரில் இருக்கும் இந்த Passல் உங்களால் தொழில் தொடங்க முடியும்… ஆனா இந்த condition இருக்கு… படிங்க life கியாரண்டி

சிங்கப்பூரில் வேலை செய்ய ஆசைப்படும் பலருக்கு இருந்தாலும் சிலருக்கு அங்கு தொழில் தொடங்க முடியுமா என சின்ன ஆசை மனதில் இருக்கும். இதற்கும் ஒரு அருமையான வழி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுகுறித்து முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சிங்கப்பூரில் வேலைக்காக நிறைய வொர்க் பாஸ்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் பலருக்கும் அறியாத ஒரு பாஸ் இருக்கிறது. அது தான் EntrePass. Entrepass என்பது சிங்கப்பூரில் தொழில் அமைக்க விரும்பும் வெளிநாட்டினருக்கான சிறப்பு குடியேற்ற விசா. இது முதலீட்டாளர்களுக்கும், தொழில்நுட்பத்தில் பின்னணி, அரிய கண்டுபிடிப்பு வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும். இந்த விசா உங்களுக்கு நேரடியாக சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை வழங்காது. தொழில் தொடங்கிய முதல் வருடத்தில் உங்கள் குடும்பத்தை உங்களுடன் அழைத்து வர முடியாது. EntrePass மூலம் தொழில் தொடங்க மூன்று முக்கிய வழிகள் இருக்கிறது.

முதலில் நீங்க ஒரு பிரைவேட் கம்பெனியை தொடங்கி விட்டு சிங்கப்பூருக்கு EntrePass அப்ளே செய்யலாம். அடுத்து EntrePass அப்ளே செய்து விட்டு பிரைவேட் கம்பெனியை தொடங்க முடியும். இல்லையென்றால், சிங்கப்பூரில் இருக்கும் citizen அல்லது PRஐ டைரக்டராக தேர்வு செய்து தொடங்கலாம். பார்டனர் கம்பெனியை தொடங்கவும் இதே வழியை தான் பின்பற்ற வேண்டும்.

ACRAவில் ஒரு கம்பெனி அல்லது கண்டுபிடிப்பு பதிவுசெய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் EntrePass விண்ணப்பிக்கலாம். பதிவு செய்யவில்லை என்றால், உங்கள் EntrePassன் முடிவை அறிந்த பிறகு நீங்கள் பதிவு செய்ய வேண்டும். துணை ஆவணங்களுடன், சிங்கை மனிதவள அமைச்சகத்திடமும், சிங்போஸ்ட் கிளையிலும் நேரடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். EntrePass விண்ணப்பம் அப்ரூவாக அதிகபட்சமாக சுமார் 8 வாரங்கள் ஆகும். MOM மற்றும் உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு வாரியம் (SPRING), இன்போகாம் மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி (IMDA) போன்ற அமைப்பால் கூட்டாக மதிப்பீடு செய்யப்படும்.

இதையும் படிங்க: டெஸ்ட் அடிக்க லட்சக்கணக்கில் பணத்தை அழிச்சது போதும்.. சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வெறும் 80,000 ரூபாய் மட்டுமே.. நான்கே நாட்களில் Certificate!

உங்கள் கம்பெனியை பதிவு செய்ய அரசுக்கு PaidUp Capitalலாக $100000 சிங்கப்பூர் டாலர் கொடுக்க வேண்டியதாக இருக்கும். இந்த தொகை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மட்டுமே. கம்பெனியோட லோக்கல் முகவரி கண்டிப்பாக இருக்க வேண்டும். உங்க கம்பெனிக்கு ஒரு பெயரை தேர்வு செய்து அப்ரூவல் வாங்கி இருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் தொழில் தொடங்க வந்திருக்கும் வெளிநாட்டினருக்கு ஒழுங்கு அமைப்பாக செயல்படுவது ACRA. அடுத்து, IRAS தான் உங்களுடைய கம்பெனி சம்மந்தப்பட்ட tax குறித்த எல்லா விஷயங்களை பார்த்து கொள்வார்கள். MAS என்பவர்கள் ஃபைனாஸ் சம்மந்தப்பட்ட தொழில் தொடங்குகிறீர்கள் என்றால் இவர்கள் தான் ஒழுங்க அமைப்பாக செயல்படுகிறார்கள். LSRA என்பவர்கள் கம்பெனியோட ரிஜெஸ்ட்ரேஷன் சான்றிதழ்கள் குறித்த சந்தேகங்களுக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

தொழில் தொடங்க என்ன டாக்குமெண்ட்ஸ் தேவைப்படும்?

  • கம்பெனியோட பெயர் அப்ரூவல்
  • பாஸ்போர்ட்
  • தொழில் குறித்த அடிப்படை தகவல்கள் அடங்கிய கோப்புகள்
  • ரெஜிஸ்டர் லோக்கல் முகவரி
  • கம்பெனியுடைய செக்ரட்டரி குறித்த தகவல்கள்
  • தொழில்முனைவோர் மற்றும் பங்குதாரர்களின் முழு தகவல்கள்
  • பிரைவேட் கம்பெனியாக இருந்தால் MAA கொடுத்திருக்க வேண்டும்.

சிங்கப்பூரில் இதற்காக சர்வீஸ் கம்பெனி நிறைய செயல்பட்டு வருகின்றனர். அவர்களிடம் நீங்கள் நேரடியாக சென்று விசாரிக்கும் போது இதுகுறித்து முழு தகவல்கள் கிடைக்கும். மேலே சொன்னது அனைத்தும் அடிப்படையாக சொல்லப்பட்ட தகவல்கள் தான். இதில் இன்னும் நிறைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts