TamilSaaga

சிங்கப்பூர்.. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10 பணியிட இறப்புகள்.. உடனே “STO”வை அமல்படுத்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்திய MOM – STO என்றால் என்ன?

சிங்கப்பூரில் பல துறைகளில் பணியிட மரணங்கள் அதிகரித்து வருவதால், நாளை திங்கள்கிழமை (மே 9) முதல் பாதுகாப்பு நேரத்தை (Safety Time-Out) விதிக்குமாறு நிறுவனங்கள் வலியுறுத்தப்படுகின்றன. இந்த தகவலை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகளை மறுபரிசீலனை செய்வதற்கும், கடந்தகால விபத்துகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கும் அவர்கள் அந்த நேரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM), பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார (WSH) கவுன்சில், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் தொழில் பங்குதாரர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

STO என்றால் என்ன (Safety Time Out)

தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பு மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்கு, குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் தங்கள் அன்றாட வேலைகளில் இருந்து ஒரு சிறிய நேரத்தை ஒதுக்கும் ஒரு திட்டமிட்ட நிகழ்வு தான் STO.

சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10 பணியிட இறப்புகள் ஏற்பட்டன, இது 2022ல் பணியிட இறப்புகளின் மொத்த எண்ணிக்கையை 20ஆகக் உயர்த்தியுள்ளது. 2016ம் ஆண்டுக்கு பிறகு இந்த அளவிலான பணியிட மரணங்கள் ஏற்படுவது இதுவே முதல் முறை.

தடைகளை உடைத்தெறியுங்கள்.. “சிங்கப்பூரில் இந்திய பெண்களுக்கு உதவ புதிய முயற்சி”.. “Let Her Shine” திட்டத்தை அறிமுகம் செய்த அமைச்சர் இந்திராணி

சிங்கப்பூரில் நாளை முதல் அமல்படுத்தப்படும் இந்த பாதுகாப்பு நேரம் (STO) இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இரண்டு முக்கிய விஷயங்களில் இது கவனம் செலுத்தும் என்றும் MOM தெரிவித்துள்ளது.

முதலாவது உயரத்தில் வேலை செய்பவர்கள் குறித்துத்தான், அதாவது உயரத்தில் வேலைபார்க்கக்கூடிய உடையக்கூடிய பரப்புகளின் மேல் நின்று வேலை செய்வது மற்றும் ஏணிகளின் பயன்பாடு ஆகியவற்றை குறித்து ஆய்வு நடத்தப்படும்.

இரண்டாவது ஃபோர்க்லிஃப்ட் போன்ற உபகரணங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது. மொத்தம் ஏழு தொழில் சங்கங்கள் இந்த இரண்டு வார காலக்கெடுவில் பங்கேற்கும். STOவை தொடர்ந்து, செயல்படுத்தப்படும் அனைத்துவிதமான மேம்பாடுகள் குறித்தும் ஊழியர்களுக்கு விளக்கப்பட வேண்டும்.

சிங்கப்பூர் வாழ் புலம்பெயர் தொழிலாளர்கள் கவனத்திற்கு.. ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசையா? – இலவசமாக கற்றுத்தர முன்வந்துள்ள பிரபல தொண்டு நிறுவனம்

நிறுவனங்கள் இந்த இணையதளத்தில் பாதுகாப்பு நேரக் (STO) குறிப்புகள் மற்றும் பிற தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என்றும் அமைச்சக தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts