TamilSaaga

சிங்கப்பூரில் ஏப்ரல் 26 முதல் அனைத்து ஊழியர்களும் பணியிடத்திற்கு திரும்ப வேண்டும் – MOM உத்தரவு

சிங்கப்பூரில் அனைத்து ஊழியர்களும் ஏப்ரல் 26 முதல் தங்கள் பணியிடத்திற்குத் திரும்பலாம் என்று MOM அறிவித்துள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்தே வேலை செய்த 75 சதவிகிதத்தினர் இனி அலுவலகம் திரும்ப வேண்டும் என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த Disease Outbreak Response System Condition (DORSCON) நிலை முதல் முறையாக ஆரஞ்சு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நோய் நிலைமையைக் குறிக்கும் DORSCON கட்டமைப்பானது பிப்ரவரி 7, 2020 அன்று ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்தப்பட்டது.

சிங்கப்பூரில் பெருந்தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பணிக்குழுவின் இணைத் தலைவர் கான் கிம் யோங் இதனை அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க – Big Breaking : சிங்கப்பூர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு “Sweet” கொடுத்த MOM – பொது இடங்களுக்கு சென்றுவர இனி கூடுதல் தளர்வு

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், ஏப்.26 முதல் 10 பேர் கொண்ட குழுவாக இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஏப்ரல் 26 முதல், வார நாட்களில் 25,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பொது இடங்களுக்கு செல்ல முடியும் என்றும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் 50,000 பேர் வரை (ஒரு வருகைக்கு எட்டு மணிநேரம் வரை) பொது இடங்களுக்கு செல்ல முடியும் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வார நாட்களில் 15,000 மற்றும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் 30,000 தொழிலாளர்கள் என்ற தற்போதைய அளவில் இருந்து இது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுப் போக்குவரத்திலும், மற்ற இடங்களிலும் மாஸ்க் அணியும் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

எவ்வாறாயினும், பணியிடத்தில், ஊழியர்கள் சில தளர்வுகளுடன் தங்கள் முகமூடிகளை அகற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் (MOH) ஒரு தனி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts