TamilSaaga

தாமதமாக Delivery செய்யப்பட்ட உணவு.. அதுவும் பாதி கடிச்ச சிக்கன் – புத்தாண்டு அன்று கடுப்பான சிங்கப்பூரர்

சிங்கப்பூரில் “Max All About Chicken” என்ற கடையின் வாடிக்கையாளர் ஒருவர் தான் புத்தாண்டு அன்று இரவு ஆர்டர் செய்த உணவு விநியோகிக்க தாமதமானதால் அதிருப்தி அடைந்துள்ளார். இதனையடுத்து ஜேசன் லியோங் என்ற அந்த வாடிக்கையாளர் Complaint Facebook என்ற Facebook குழுவில் தனது கதையைப் பகிர்ந்துள்ளார். லியோங் பகிர்ந்த தகவல்களின் அடிப்படையில், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று ஆறு துண்டுகள் கொண்ட Fired Duo Bundle மற்றும் எட்டு துண்டுகள் கொண்ட Fired Trio Bundle ஆகியவற்றை ஆர்டர் செய்திருந்தார்.

வெறும் 4 வருஷம் : ஆனா குறைச்சது 126 கிலோ – Mass கட்டிய சிங்கப்பூர் இளைஞர்

அவருக்கும் அவரது விருந்தினர்களுக்கும் இரவு உணவாக வழங்குவதற்காக அவர் அந்த உணவினை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி ஆர்டர் செய்துள்ளார். மாலை 5 மணிக்கு ஆர்டர் தயாராகி, ஒரு மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாலை 6:45 மணியளவில், அவர் கடைக்கு அழைத்தார், அவருடைய ஆர்டர் இன்னும் கடையில் தான் இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது என்று கூறினார்.

அதன் பிறகு அவர் வாட்ஸ்அப் மூலம் அந்த ஸ்தாபனத்தின் பிரதிநிதி ஒருவரைத் தொடர்பு கொண்டார், அவர் மன்னிப்புக் கேட்டு, உடனடியாக டெலிவரிக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினார். இரவு 8 மணிக்கு, ஆர்டர் இன்னும் வரவில்லை, மேலும் கடையில் டெலிவரி எடுப்பதற்காக டிரைவருக்காக காத்திருப்பதாகக் கூறினார்கள். லியோங் பணத்தைத் திரும்பப் பெற விரும்புவதாகக் கூறினார், மேலும் டெலிவரிக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று பிரதிநிதி வலியுறுத்தினார். இறுதியில் இரண்டு பொருட்களும் இறுதியாக இரவு 9:30 மணியளவில் டெலிவரி செய்யப்பட்டபோது, ​​லியோங் தோஅதை சாப்பிட தயங்கினார்.

“சிங்கப்பூர் வரும் பயணிகளின் கவனத்திற்கு” – சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் அளித்த Update

அவர் தனது பேஸ்புக் பதிவில், அந்த ஆறு துண்டுகள் கொண்ட ஆர்டர் “ஏற்கனவே சாப்பிட்டது போல் தெரிகிறது” என்று கூறினார். அவரைப் பொறுத்தவரை, துண்டுகள் உதிர்ந்து, “மிகவும் வறண்டு” இருந்தது என்று கூறினார். இறுதியில், அந்த 6 பீஸ் சிக்கனை தூக்கி எறிந்ததாக லியோங் கூறினார். இதனையடுத்து இந்த நிகழ்வு குறித்து mothership செய்தி நிறுவனம் சம்மந்தப்பட்ட அந்த கடையை அணுகியபோது.. “பாதிக்கப்பட்ட பொருட்களை வாடிக்கையாளருக்குத் திரும்பப் அளித்துள்ளதாகவும். நேற்று ஜனவரி 2ம் தேதி மாலை 6:30 மணிக்கு மீண்டும் டெலிவரி செய்தோம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது .

மேலும் சம்பவத்தன்று வழங்கப்பட்ட உணவு தங்களுடைய உண்மையான தரத்தில் இல்லையென்றும், நிச்சயம் அது குறித்து விசாரணை நடக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts