TamilSaaga

கூடுதல் நேரம் வேலை செய்கிறீர்களா? உங்களுக்காகவே சிங்கப்பூர் மனிதவள அமைச்சு வெளியிட்ட செய்தி

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகத்தின் சார்பில் இன்று முகநூலில் ஒரு பதிவு வெளியிடப்பட்டு உள்ளது.

நிறுவனங்களில் கூடுதல் நேரம் (Over Time) நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கானது.

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தகவல், உங்களை பணிக்கு அமர்த்திய நிறுவனமானது ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 72 மணி நேரம் மட்டுமே கூடுதல் நேரம் வேலையை செய்ய சொல்லி உங்களை அணுக முடியும்.

வேலை வாய்ப்புச் சட்டம் பகுதி IV க்கு கீழ் வரும் அனைத்து பணியாளர்களுக்கு இந்த சட்டம் பொருந்தும்.

முழு நேர, பகுதி நேர, ஒப்பந்த மற்றும் நிரந்தரமான பணியாளராக இருந்தாலும் அனைவருக்கும் பொதுவானது இந்த விதிமுறை.

என்பதை தனது முகநூல் பக்கத்தில் MOM வெளியிட்டு உள்ளது.

Related posts