சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் மர்ம நபர் புகுந்து பட்டாக்கத்தியுடன் தாக்குதல் நடத்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 6.45 மணிக்கு கிடார் பேக் உடன் ராயபுரத்தில் உள்ள சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்த நிலையில், திடீரென பேக்கில் இருந்து பட்டாக் கத்தி மற்றும் கேடயம் ஆகியவற்றை எடுத்து அலுவலக கண்ணாடிகளை உடைத்ததோடு அங்கிருந்த தொலைக்காட்சி ஊழியர்களை மிரட்டியுள்ளார். வசை மொழிகளுடன் கணினி உள்ளிட்ட பொருட்களையும் அந்த மர்ம நபர் அடித்து நொறுக்கினார். குஜராத் மாநில பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த அந்த நபரின் ஓட்டுநர் உரிமத்தில் கோவை உப்பிலிபாளையம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் அந்த நபர் தமிழில் பேசியிருக்கிறார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அந்த மர்ம நபரைக் கைது செய்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஊடக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.